
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு கவிதை கருத்தரங்கம் நடைபெற்றது.
“வாழும் சரித்திரம் அவருக்கு வண்ணக் கவிரசம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கவிதை கருத்தரங்கில் மாண்புமிகு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் KN. நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .

அப்போது, எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தமிழ் மொழியையும் – தமிழ்நாட்டையும் காக்க நம் முதல்வர் அவர்கள் முன்னெடுக்கும் தொடர் போராட்டங்கள் பற்றியும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் அவரின் திட்டங்கள் பற்றியும் விளக்கிக் கூறினார் .

இந்த நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் முனைவர் க. பொன்முடி அவர்கள், திரு. எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள், திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ஜெகத்ரட்சகன் அவர்கள், திரு. அருண் நேரு அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. காடுவெட்டி தியாகராஜன் அவர்கள், திரு. ஸ்டாலின்குமார் அவர்கள், திரு. அன்னியூர் சிவா அவர்கள், மாநகர மேயர் திரு. அன்பழகன் அவர்கள் ஆகியோருடன் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
