
கார்த்திகேயன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருச்சி மாவட்ட அம்மா பேரவையின் மாவட்ட செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன். இவரது தம்பி அரவிந்தன் அம்மா பேரவையின் மாநில இணை செயலாளராக பதவி வகிக்கின்றார். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்கேற்ப அண்ணன் கார்த்திகேயனும் தம்பி அரவிந்தனும் திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இரு பெரும் தூண்கள் என்றால் அதில் எந்தவிதமான குழப்பமும் கிடையாது.

ஆம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிமட்ட தொண்டனில் இருந்து ஒவ்வொரு தொண்டன் நிர்வாகி என அனைவரின் மீதும் அளப்பரிய அன்பும் பாசமும் கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எந்தவிதமான பாரபட்சமும் இன்றி உடனடியாக நிறைவேற்றுபவர்கள் தான் இந்த அண்ணன் தம்பிகள்.
சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருச்சிக்கு பிரச்சார பயணம் மேற்கொண்ட பொழுது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வெள்ளி வேல் நினைவு பரிசாக வழங்கியதோடு அவருடைய வெற்றிக்கு சபதமும் எடுத்துக் கொண்டார் ஆவின் கார்த்திகேயன்.
மாநகர் மாவட்டத்தில் காந்தி சந்தை அருகே நடைபெற்ற எடப்பாடியாரின் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பெருந்திரளான மக்களை கூட்டியதோடு அங்கு குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் குடிப்பதற்கு தேவையான நீரையும் குளிர்பானங்களையும் வழங்கியதோடு அவர்களுக்கு பல வகைகளிலும் உதவி செய்து அவர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் ஆவின் கார்த்திகேயன்.
பழகுவதற்கு எளிய மனிதர் யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எளிதாக இவரை அணுகி விடலாம் என்பதே இவருடைய சிறப்பு.
சமீபத்தில் கோடை வெயிலில் வெப்பம் திருச்சியை சுட்டரித்த வேளையிலே அவருடைய தம்பி அரவிந்தன் மாமன்ற உறுப்பினராக உள்ள 14 வது வார்டு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வெப்பத்தை போக்குவதற்கான வேலைகளை செய்ததோடு மட்டுமல்லாமல் அந்தப் பகுதியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு சேலை வேட்டி போன்ற பொருட்களை வழங்கியதோடு நலத்திட்ட உதவிகளையும் மேற்கொண்டார் அரவிந்தன் மற்றும் ஆவின் கார்த்திகேயன்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக ஆவின் கார்த்திகேயன் நிறுத்தப்படும் பட்சத்தில் எந்த விதமான சிரமமும் இல்லாமல் எளிதாக வெற்றிக்கனியை பறித்து விடுவார் என்பதே அரசியல் நோக்கர்களில் ஆழமான கருத்து.
1 Comment
Super