திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, அல்லித்துறை உராட்சி சுபதம் அவென்யூ குடியிருப்புப் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

தங்கள் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்படுவதை அறிந்து, அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வருவது எங்களின் தினசரி வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும், எங்கள் வீட்டு பெண்கள், குழந்தைகள் தெருவில் நடமாட இயலாத சூழல் உருவாகும்.
இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று, திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் திரு. துரை வைகோ அவர்களுக்கு அஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பி இருந்தார்கள்.

அவர்களின் புகார் கடிதத்தை கவனத்தில் கொண்ட திரு துரை வைகோ எம்பி அவர்கள், கடந்த 23.7.2025 புதன்கிழமை அன்று காலை 7 மணி அளவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சரவணன் அவர்களைச் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
அப்பொழுது சுபதம் அவென்யூ மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன், அந்த குடியிருப்பு சங்கத்தினர் வரும் வரை அவர்களுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே காத்திருந்த துரை வைகோ எம்பி அவர்கள், அந்த குடியிருப்பு நிர்வாகிகளைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்பு, சுபதம் நகரில் புதிய மதுபானக் கடை அமைக்கக் கூடாது என்ற தனது பரிந்துரைக் கடிதத்தை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அந்த சுபதம் அவென்யூ குடியிருப்பு நிர்வாகிகள், தங்கள் பகுதியில் நீண்ட நாட்களாக மழை நீர் வடிகால் இல்லை என்றும், சாக்கடை முறையாக பராமரிக்கப்படாமல் குடியிருப்புகளை சூழ்ந்து இருக்கும் காரணத்தினால் நோய் தொற்றுக்கு உள்ளாகும் பாதிப்பு இருப்பதாகவும், இதை பாராளுமன்ற உறுப்பினர் திரு துரை வைகோ அவர்கள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்கள்.
அவர்களின் கோரிக்கையை கவனமாக கேட்டுக் கொண்ட திரு துரை வைகோ அவர்கள், உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு இது தொடர்பாக தன்னுடைய பரிந்துரை கடிதத்தை எழுதி அதை தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் மூலமாக இன்று மாவட்ட ஆட்சியர் திரு சரவணன் அவர்களிடம் வழங்கிட ஏற்பாடு செய்தார்.

இதனையடுத்து திரு மணவை தமிழ் மாணிக்கம் அவர்கள் சுபதம் அவென்யூ குடியிருப்பு நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, திரு துரை வைகோ எம்பி அவர்களின் பரிந்துரை கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியரும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
திரு துரை வைகோ எம்பி அவர்களின் இந்த அதிவேக நடவடிக்கையை கண்ட அந்த குடியிருப்பு நிர்வாகிகள், அவரின் செயல் திறனையும், அவரின் மக்கள் பணியையும் வெகுவாகப் பாராட்டி திரு துரை வைகோ எம்பி அவர்களுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள்.
