New Trichy Times

Current Date and Time
7/25/2025 1:52:51 AM

தமிழகத்திலிருந்து குழந்தைகளை கடத்தி செல்லும் வடநாட்டு கும்பல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல், தமிழகத்திலிருந்து ஒன்பது குழந்தைகளை கடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டதில், குழந்தைகளை கடத்தியவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தரகர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இன்று அதிகாலை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் சந்தேகத்திற்கிடமாக இருந்ததை போலீசார் கண்காணித்தனர். அப்போது, அவர்கள் தமிழகத்திலிருந்து குழந்தைகளை கடத்தி, கொத்தடிமைகளாக வேலைக்கு சேர்க்கும் கும்பல் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, உடனடியாக மூவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் சிக்கியிருந்த ஒன்பது சிறுவர்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, உடனடி நடவடிக்கை எடுத்து சிறுவர்களை மீட்ட போலீசாருக்கு ரயில்வே உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About Author
admin
View All Articles
Check latest article from this author !
வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக திருச்சி எஸ் டி பி ஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி பொன்மலையில் வந்தே பாரத் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் வசதி துரை வைகோ எம்பி நன்றி அறிக்கை
திருச்சி திருப்பதி இடையே பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற திருச்சிராப்பள்ளி மக்களின் நீண்ட கால கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் துரை வைகோ எம்பி மனு
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோ பிரியாவிடை உரை – பார்லிமென்ட் tiger குரல் இனி நாடாளுமன்ற அவைகளில் ஒலிக்காது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD