
அரசியல்வாதிகளை மிஞ்சும் அதிகாரிகள் பல்பு ஊழல்?
ஊழலிலும் ஊழல் செய்துள்ளனர் -ஊழல் பெருச்சாளிகள்?
அந்தநல்லூர் பஞ்சாயத்து யூனியனில் ரூ7,80,000 ஊழலா?

திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூர் பஞ்சாயத்து யூனியனில் உள்ள 25 ஊராட்சிகளில் 12 ஊராட்சிகளில் 24W எல்இடி தெருவிளக்குகள், ஓசூரில் உள்ள Tanvi Infra நிறுவனத்திடம் இருந்து ஒரு 24W எல்இடி பல்பின் விலை 1950ரூபாய் வீதம் வாங்கி உள்ளனர். இவ்வளவு தூரம் சென்று வாங்க வேண்டிய நோக்கம் என்ன இது முதலில் விசாரிக்க வேண்டிய ஒன்று.
அல்லூர் -50
கோப்பு -50
எட்டரை -50
மயிலம்பது -50
கொடியாலம்- -50
பெருகமணி -50
அந்தநல்லூர் -50
திருச்செந்தூரை -50
கம்பரசம்பேட்டை -50
பெட்டவாய்த்தலை -50
திருப்பராய்த்துறை -50
முள்ளிக்கரும்பூர் -100
திருச்சில 24W எல்இடி தெருவிளக்குகள் வாங்கினால் நல்ல தரமான துரு பிடிக்காத கம்பெனி 24W எல்இடி தெருவிளக்கு பல்பு ரீப்ளேஸ்மென்ட் வாரண்டியுடன் அதிகபட்ச விலையாக 585-650 ரூபாய்க்கு கிடைத்துவிடும்.

ஒரு பல்புக்கு ₹1200 ஊழல் செய்துள்ளனர். நம்மிடம் உள்ள பில்களின் எண்ணிக்கையின் படி ஊழல் செய்து வாங்கிய 24W எல்இடி தெருவிளக்கு எண்ணிக்கை 650 ஆக மொத்தம். 7,80,000ரூபாய் மக்களின் வரிப்பணம் சுருட்டப்பட்டுள்ளது.
அந்தநல்லூர் பஞ்சாயத்து யூனியனில் உள்ள 25 ஊராட்சிகளில் 12 ஊராட்சிகளில் ஆன்லைனில் ஏற்றியுள்ள பில்களில் ஆறு பில்கள் தெளிவாக தெரியவில்லை, போலியான பில்கள். ஊழலிலும் ஊழல் நடந்துள்ளது போல் தெரிகிறது.

இந்த ஊழல் பெருச்சாளிகளின் தைரியம் அதிர்ச்சியடைய செய்கிறது. ஏனென்றால் எங்களிடம் உள்ள அனைத்து பில்களும் https://egramswaraj.gov.in/ ஆன்லைன் மூலம் யார் வேணாலும் எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம்.
அப்படி இருக்கையில் எந்த தைரியத்தில் செய்தார்கள், இதேபோன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பிளாக்கிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து யூனியனையும் சோதிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மொத்த மாவட்டங்கள் 38 அதிலுள்ள பஞ்சாயத்து யூனியன் 388, வில்லேஜ் பஞ்சாயத்து 12,620 ஆக மொத்தம் ஒரு பஞ்சாயத்து யூனியனுக்கு 7,80,000ரூபாய், அப்படின்னு வச்சா 388 பஞ்சாயத்து யூனியனுக்கு 30 கோடி ரூபாய் ஊழல்.

கிராமத்துக்கே இப்படின்னா, தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 டவுன் பஞ்சாயத்துகள், எவ்வளவு இருக்கும் எங்கேயோ போகும் இந்த எல்இடி பல்பு ஊழல். 200 300 கோடியை தாண்டும் போல தெரிகிறது இந்த எல்இடி பல்பு ஊழல்.
இந்த ஊழல் அந்தநல்லூர் பஞ்சாயத்து யூனியனில் மட்டும் நடந்துள்ளதா அல்லது தமிழகம் முழுவதும் ஏதோ ஒரு பெரும் பெரும்புள்ளியின் தொடர்புடன் நடந்துள்ளதா என்று உடனடியாக விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று. ஊழல் கோடிக்கணக்கில் நடந்துள்ளது. பல முக்கிய புள்ளிகளின் தொடர்பு இருக்கும் போல் தெரிகிறது.

இந்த கம்பெனியின் பேன் நம்பர் – AAUFT7380A ஜிஎஸ்டி நம்பர் -GSTIN -33AAUFT7380A1ZZ. இந்த கம்பெனி ஜி எஸ் டி யில் பதிவு செய்யப்பட்டது 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் தேதி தான். ஆக ஏதோ ஒரு பெரும்புள்ளி இதன் பின்னே இருந்து செயல்படுகிறார் நடவடிக்கை எடுக்குமா அரசாங்கம்?
அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை நடவடிக்கை எடுத்து ஊழல் பெருச்சாளிகள் சுருட்டிய மக்களின் வரிப்பணத்தை பணத்தை மீட்க வேண்டும் என்பது சாமானியனின் கோரிக்கையாக உள்ளது.



