NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி திருவெறும்பூர் ஏப்ரல் 04

திருவெறும்பூர் அருகே துவக்குடிமலையில் உள்ள அரசினர் பல்தொழில்நுட்ப கல்லூரியில் செயல்பட்டுவரும் போதைக்கு எதிரான சங்கம் (ANTI DRUG CLUB) மற்றும் மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பு சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போதை பழக்கத்திற்கும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் தாங்கிய பதாகைகளுடன் பேரணியில் கலந்துகொண்டனர்.


பேரணியை கல்லூரியின் முதல்வர் திரு. தமிழ் செல்வம் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார், திருவெறும்பூர் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறை ஆய்வாளர் திருமதி M.யசோதா அவர்கள் மற்றும் துவக்குடி காவல் துறை துணை ஆய்வாளர் திரு. நாகராஜ் ஆகியோர் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு சிறப்புரை ஆற்றினார்கள்,

சிறப்பு விருந்தினர்களாக நாவல்பட்டு அரசு சுகாதார நிலைய முதுநிலை மருத்துவர் திரு பாலமுருகன் மற்றும் ICTC ஆலோசகர் திருமதி உமா அவர்கள் கலந்துகொண்டனர்.
கல்லூரியின் நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் / போதைக்கு எதிரான சங்க ஒருங்கிணைப்பாளர் திரு பரமசிவக்குமார் அவர்கள் பேரணியை ஏற்பாடு செய்து நடத்தினார்.

Related Posts

POST MY ADD