
திருச்சி பொன்மலைப்பட்டி நேரு தெருவில் அமைந்துள்ள சென் மேரிஸ் நர்சரி & பிரைமரி பள்ளியில் இன்று திருச்சி மாவட்டம் பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் திருச்சி சோழா ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

ஆனது நடைபெற்றது. இதில் அருட்தந்தை எம்.ஜோஸப் மைக்கேல் முன்னிலை வகித்தார். தலைமை ஏ.எட்வின் பால்ராஜ் தாளாளர் செயின்ட் மேரிஸ் நர்சரி பள்ளி. முகாமை துவக்கி வைத்தவர் கே. ரமேஷ் 46 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருச்சி மாநகராட்சி. அவர்கள் கலந்து கொண்டனர்

கண்ணில் சீழ் வடிதல், சகை வளர்ச்சி, கண்ணில் நீர் அழுத்தம், தூரப்பார்வை குறைவு பார்வை மங்கள் தலைவலி கண்ணில் நீர் வடிதல் போன்ற பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமின் மூலம் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
