NTT TAMIL

Current Date and Time
Loading...

இந்திய கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் கிறிஸ்து மூர்த்தி இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவதுதிருச்சி மாநகர் மாவட்ட, இந்தியக் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி சார்பில் ஈஸ்டர் தினவிழா எங்கள் கட்சியான இ.கி.ஜ.க-வின் 27-ஆம் ஆண்டு விழா, ஏழை எளியோர் நலத்திட்ட உதவி வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாவாக கொண்டாட வருகிற 20.04.2025 அன்று திருச்சி புத்தூர் நாலு ரோடு திருச்சி 17 என்கிற இடத்தில் ஈஸ்டர் திருநாள், திருநாளில் மிகப் பெரிய சத்தியத்தை அறிவிக்கலாம் என்று திருச்சி மாநகர் காவல்துறை மற்றும் உறையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரிடம் கடந்த 03.04.2025 அன்றே விண்ணப்ப மனு கொடுத்தோம்.

ஆனால் அரசியல் சூழ்ச்சி காரணமாக இன்றைய (16.04.2025) தேதியில் காரணமே சொல்லாமல் அனுமதி தர மறுத்து விட்டனர். வாய் மொழி உத்தரவு தான் நாங்கள் கேட்டது. அனுமதி ரத்து என எழுத்து மூலமாய் கேட்டோம். அதுவும் தரமுடியாது என ஆனவமாக பதில் அளித்தார்.சிறுபான்மை மக்களுக்கு திமுக தான் பாதுகாப்பு என முழக்கமிடும் தமிழக முதல்வர் சொல்வதெல்லாம் பொய்.சிறுபான்மை மக்களுக்கு குரல் கொடுக்கும் எங்கள் இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சிக்கே அனுமதி இல்லை என்றால் இனியும் திமுக-வை நம்புவது முட்டாள் தனமானது.திமுக ஆட்சியில் நிறைய தேவாலயங்கள் தாக்கப்படுகிறது. இதற்கெல்லாம் வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம்.இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்

Related Posts

POST MY ADD