NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் நகரில் தினமும் இரவு 10:30 க்கு தொடங்கும் மின்வெட்டு நள்ளிரவு 12 மணி வரை நீள்கிறது.

இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களை எரிச்சலும் வேதனையும் பட வைக்கின்றது. ஒரு புறம் கடுமையான கோடையின் புழுக்கம் மறுபுறம் ஶ்ரீரங்கத்தில் பாரம்பரியமான கொசுக்களின் ரீங்காரம் மற்றும் குருதி கொடை. இவற்றுக்கு சிகரம் வைத்தது போல நமது மின் வாரியத்தின் அறிவிக்கப்படாத மின்வெட்டு.

தினம் தினம் உறங்கும் வேளையில் சித்ரவதை அனுபவிப்பதாக புலம்புகின்றனர் பொதுமக்கள்.

அதிமுக கோட்டையாக இருந்த ஶ்ரீரங்கம் தொகுதி உடன்பிறப்புகள் கடும் உழைப்பால் திமுக வசம் வந்தது. ஆனால் இன்று மாண்புமிகு மின்வாரியத்தின் மின்வெட்டால் மீண்டும் அதிமுக வசம் செல்ல வாய்ப்பாக மாறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள்தான் உள்ளது உடன்பிறப்புகள் தான் பாவம் உங்கள் உழைப்பு மின்வாரியத்தின் செயலால் கருகி பஸ்பமாக போகிறது.

Related Posts

POST MY ADD