NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி பால்பண்ணை முதல் டோல் பிளாசா வரை உள்ள தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விளக்குகள் சரிவர எரிவதில்லை, அதனால் தொடர் விபத்துகள் நடப்பதாக வந்த குற்றச்சாட்டு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ அவர்களின் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து,

தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) மண்டல அலுவலருக்கு கடந்த வாரம் கோரிக்கை வைத்தார் . மேலும் அது குறித்து தஞ்சையில் உள்ள NHAI திட்ட இயக்குனரிடம் தகவல் கொடுத்தார்.

அப்போது, மேற்குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலையில் விளக்குகள் இல்லாத அனைத்து இடங்களிலும் புதிய சாலை விளக்குகள் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், பழைய சாலை விளக்குகளை பழுது நீக்கிட ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, இன்று (19.05.2025) மாலை 7:30 மணியளவில், அப்பகுதிகளுக்கு துரை வைகோ அவர்கள் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

திமுக மாநகர செயலாளரும் மாமன்ற மண்டலக் குழு தலைவருமான மு. மதிவானன், தேசிய நெடுஞ்சாலைத்துறை பொது மேலாளர் (தொழில் நுட்பம்) மற்றும் திட்ட இயக்குநர் திரு செல்வகுமார் மற்றும் பால்பண்ணை சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பு நிர்வாகிகள், ஆய்வில் பங்கேற்றனர்.

Related Posts

POST MY ADD