NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு எம்.பி. துரை வைகோ மாலை அணிவிக்கின்றார். அனைவரும் பங்கேற்போம் வாரீர்…!பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350-ஆவது சதய விழாவினையொட்டி, 23.05.2025 வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணிக்கு, திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பேரரசர் சிலைக்கு மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ அவர்களது தலைமையில், துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா அவர்களது முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

ஆகவே, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்திற்கு உள்பட்ட மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள், மாநகர பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகங்களுக்கு உள்பட்ட ஒன்றிய, நகரச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.

இப்படிக்கு

வெல்லமண்டி இரா.சோமு,

மாநகர் மாவட்டச் செயலாளர் டி.டி.சி.சேரன்,

வடக்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம்,

தெற்கு மாவட்டச் செயலாளர் திருச்சி மாவட்ட மறுமலர்ச்சி திமுக.,

Related Posts

POST MY ADD