ஸ்ரீரங்கம் இரயில் நிலைய திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, இன்று (22.05.2025) மதியம் ஒரு மணியளவில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அலுவலகத்திற்கு துரை வைகோ அவர்கள் வரும்போது நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதி மக்களும், கழகத் தோழர்களும் காத்திருந்தனர்.

முதலில் பொது மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அவர்களை அழைத்து சந்தித்தார், கோரிக்கைகளை பெற்றுக் கொண்டார், அமைப்பு சார்ந்த தொகுதி மக்களோடு உரையாடல்களை மேற்கொண்டார், பரிந்துரை கடிதங்கள் வழங்கினார்..

அதன் தொடர்ச்சியாக, மதிய உணவு இடைவேளையும் எடுத்துக் கொள்ளாமல் கழகத் தோழர்களை சந்தித்தார். அதன் பிறகு, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெல்லமண்டி சோமு அவர்களின் முன்னிலையில் திருச்சி மாநகர் மாவட்ட பகுதி கழக செயலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

.அப்போது, நாடாளுமன்ற அலுவலகப் பணிகளில் எவ்வாறு பங்கெடுக்க வேண்டும், மக்கள் நலப் பணிகளில் எப்படி ஈடுபட வேண்டும், அது எவ்வாறு கட்சிக்கும், தலைவருக்கும், எனக்கும் அதனால் கழகத் தோழர்களுக்கும் நற்பெயரை ஈட்டி தரும் என்று எடுத்துரைத்தார்.

அங்கன்வாடி, நியாய விலை கடை, குடிநீர் தொட்டி உள்ளிட்ட மக்களின் தேவைகளை அறிந்து, கோரிக்கைகள் பெற்று, அதனை நிறைவேற்றி தர செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கினார். மேலும், குடியிருப்பு சங்க நிர்வாகிகளை அணுகி அவர்களை அழைத்து, அவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கூட்டத்தை முடித்து புறப்படும் போது மாலை நேரம் ஆகியிருந்தது. அவரது இல்லம் வந்து மதிய உணவருந்தும் போது மணி ஐந்து. ஆனாலும் நிச்சயமாக அவருக்கு மட்டுமல்ல நமக்கும் மனதிற்கு நிறைவான நாளாக இன்றைய நாள் அமைந்தது,

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒரு பாரம்பரியமிக்க அரசியல் தலைவரின் மகன் மதிமுக என்கின்ற 32 வருட கால அனுபவம் கொண்ட அரசியல் கட்சியின் தலைவர் இவ்வளவு எளிமையாக பொதுமக்களை சந்தித்து உரையாடுவதும் அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து உடனுக்குடன் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அந்த பணிகளை நிறைவேற்ற கோரிக்கை வைப்பதும் தன்னுடைய கட்சி நிர்வாகிகளை அடைத்து மக்களின் கோரிக்கைகளை பெற்று உடனடியாக அவற்றை ஆராய்ந்து உரிய விளக்கம் தருமாறு கட்டளையிடுவதும் மக்கள் பணியாற்றுவதும் முக்கிய விஐபிகளை சந்திப்பதும் என ஒரு நாளின் அதிகபட்ச நேரத்தை தொகுதி மக்களின் தொகுதியின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்தி வரும் திரு துரை வைகோ அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நல்ல மனிதர் செயல்வீரர் மக்களிடம் கனிவாக அணுகும் எளிமையான பாராளுமன்ற உறுப்பினர் திருச்சிராப்பள்ளி தொகுதிக்கு கிடைத்திருப்பதாக பொதுமக்கள் நம்மிடையே மகிழ்ச்சியோடு தெரிவித்தார்கள்.




