
. திருச்சி மாவட்டம் மருந்தாண்ட குறிச்சி கிராமத்தில் இயங்கி வரும் உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருச்சி நகரப் பகுதி மட்டுமல்லாது, ஸ்ரீரங்கம் வட்டத்திற்குட்பட்ட சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் உள்ளவர்கள் நிலம், வீடு, வீட்டு மனை, போன்றவற்றை வாங்க, விற்க பத்திர பதிவு செய்யவும், தாங்கள் வாங்கும் சொத்திற்கும் வில்லங்கச் சான்று பெறுதல், திருமணம் பதிவு செய்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்காக தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் மேற்கூரையில் செடிகள் முளைத்து, கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் வகையில் காணப்படுகின்றன, கட்டடத்தின் பக்கவாட்டு சுவர்களிலும் தண்ணீர் கசிந்து வெளியேறி, பாசி பிடித்துள்ளது.
மேலும் மேற்கூரையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு உள்ளதால், மழைக்காலங்களில் மேற்கூரையின் வழியாக மழைநீர் அலுவலகத்துக்குள் வழிந்தோடுகிறது.

நீண்ட காலமாக பராமரிக்கப்படாத காரணத்தினால் இந்தக் கட்டடத்தின் பின் பகுதியில் புதர் மண்டி கட்டிடத்தின் ஜன்னல்களை அடைத்துக் கொண்டுள்ளது. இதனால், விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் ஊழியர்கள் அச்சமடைந் துள்ளனர்.

இதனால் உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தை போர்க்கால அடிப்படையில் புதுப்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நடவடிக்கை எடுக்குமா பொதுப்பணித்துறை ….
2 Comments
METRYTRE1707725MAVNGHJTH
METYUTYJ1885496MARETRYTR