New Trichy Times

Current Date and Time
Loading...

விழிப்புணர்வு பிரச்சார விருது வழங்கும் நிகழ்ச்சி

திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி பங்கேற்பு
திருச்சி, ஜூன்.05-
உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை நாகமங்கலம் பகுதியில் அமைந்துள்ள ஹர்சமித்ரா மருத்துவமனையில் புகையிலைக்கு எதிராக ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க என்ற தலைப்பில் போட்டி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி பங்கேற்று சிறந்த படைப்பாளிகளுக்கு விருதுகளை வழங்கி பேசினார்.

மனிதனாக பிறந்த அனைவரும் முதலில் புகையிலை எதிர்க்க வேண்டும் என்பது அவசியமாகிறது. புற்று நயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி அதிகமாக இருக்கும்
புற்று நோயால் இறந்தவர்கள் குறித்து நான் பிரார்த்தனை செய்வேன், காரணம் அவர்கள் ஒரு பெரிய வலிகளிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள் என நம்புகிறேன்‌‌. ஆரம்ப நிலை புற்றுநோயை கண்டறிந்து அதிலிருந்து மக்களை காக்கும் பணியை செய்பவர்கள் மகத்தான பணி செய்கிறார்கள்.


அந்த வகையில் இந்த புண்ணிய பணியை செய்து வரும் ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் அதில் பணியாற்றும் மருத்துவர்கள்,ஊழியர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் செயல் இயக்குனர் டாக்டர். சசி பிரியா நன்றி கூறினார்‌.

இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களை சார்ந்த மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்,, பேராசிரியைகள் கல்லூரி உரிமையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD