NTT TAMIL

Current Date and Time
Loading...


திருச்சி, ஜூன்.07-
திருச்சி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் அருள் தலைமை தாங்கினார்.

இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு மாநில துணைத்தலைவர் மேகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் அய்யாக்கண்ணு பேசும்போது கூத்தைபார் கிராமத்தில் உள்ள கிளி வாய்க்கால் நடு குழுமி முற்றிலுமாக உடைந்து விட்டது.இது தொடர்பாக இந்த வருட சம்பா சாகுபடிக்கு முன்னதாகவே அந்த குழுமியை சீரமைத்து தருமாறு தங்களிடம் சுமார் 6 மாத காலத்திற்கு முன்பாக மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குருவை சாகுபடிக்கு அரசு சான்று அளிக்கப்பட்ட தரமான விதைகள் வழங்க வேண்டும்.

ஜூன் 12 மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாக ஏரி குளங்களை தூர் வரவேண்டும். யூரியா அனைத்து ஊர்களிலும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன்களை காலதாமதம் இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

மேலும் ஐக்கிய
விவசாயிகள் முன்னணி சம்சுதீன் பேசும்போது,
திருவெறும்பூர் தாலுகா நத்தமாடி பட்டி கிழக்குறிச்சி பஞ்சாயத்தில் விவசாய நிலத்துக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து உள்ளார்கள்.
இது தொடர்பாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு உதவி ஆட்சியர் அதனை மீட்டெடுத்துள்ளார். இருப்பினும் ஒரு சர்வே எண் அளவீடு செய்யாததால் சாலை பணி தடை ஆகியுள்ளது அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Posts

POST MY ADD