
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் குழுமணி அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஜெயமங்கள ஸ்ரீ மஹா பிரத்தியங்கிரா தேவி பீடத்தின் நூதன ஆலய ஸ்ரீ வலம்புரி சக்தி கணபதி அஷ்டபந்தன பிரதிஷ்டை மற்றும் ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் பாலஸ்தாபனம் பிரதிஷ்டை நடைபெற்றது.

இந்த நூதன ஆலய அஷ்ட பந்தன பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு ஸ்தாபகர் தெய்வ இயக்குனர் மந்திரமூர்த்தி குருஜி கல்யாண ராம பட்டாச்சாரியார் சுவாமிகள் தலைமை ஏற்று ஸ்ரீ வலம்புரி சக்தி கணபதி மற்றும் ஸ்ரீ குபேர ஆஞ்சநேய சுவாமிகளின் அஷ்ட பந்தன பிரதிஷ்டை செய்து வைத்தார்கள் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அருளை பெற்றனர்
