NTT TAMIL

Current Date and Time
Loading...

கடந்த 15.06.2025 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் தலைமையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வி. மைதீன் சிராஜூதீன் – எம். காஷிஃபா பானு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தன்று துரை வைகோ எம்பி ஊரில் இல்லாத காரணத்தால் பங்கேற்க இயலாது என்ற தகவலை அழைப்பிதழ் கொடுத்தபோது அவர் தெரிவித்த மாத்திரத்திலேயே, பரவாயில்லை மாமா; ஆனால் அவசியம் எங்க வீட்டுக்கு வந்து எங்களை வாழ்த்த வேண்டும் என்று மிகவும் அன்புடன் கேட்டுக்கொண்டார்.

இன்று (21.06.2025) அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மணமக்களுக்கு அறநெறி நூலான திருக்குறளை வழங்கி, இணைபிரியாமல் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார் துரை வைகோ எம்பி .

அதன்பிறகு, அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த மதிய விருந்தில் கலந்துகொண்டுவிட்டு, மீண்டும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அவரது குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டு புறப்பட்டார்.

மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொகையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா. சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டிடிசி சேரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Posts

POST MY ADD