
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், தேசிய விவசாய மற்றும் கிராம வளர்ச்சி வங்கியின் (NABARD) திருச்சி கிளஸ்டர் அலுவலகத்தில் உதவி பொது மேலாளராக (மாவட்ட வளர்ச்சி) பணியாற்றும் திரு. என். எம். மோகன் கார்த்திக் அவர்கள் நேற்று (04.07.2025) மாலை 6:30 மணியளவில், துரை வைகோ mp அவர்களின் அலுவலகத்திற்கு வந்திருந்து மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அப்போது, அவர்கள் நடத்திய உரையாடலில், திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவர்களது வங்கி மூலம் வழங்குமாறு துரை வைகோ mp கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, கிராமப்புற வளர்ச்சி, விவசாய ஆதரவு மற்றும் பொருளாதார வளர்ச்சி திட்டங்களில் NABARD-ன் பங்களிப்பு மிகவும் அவசியமாக உள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்றி, திருச்சி மக்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் துரை வைகோ mp..