திருச்சி விமான நிலையத்தில் நடந்த மோதல் வழக்கு
மதிமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று நீதிமன்றம் வந்தனர்.
இம்மாதம் 19-ஆம் தேதி தீர்ப்பு
திருச்சி விமான நிலையத்திற்கு 2018-ஆம் ஆண்டு மே 19-ம் நாள் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் வருகை தந்தார்.
அப்போது, விமான நிலையத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியினர், தலைவர் வைகோ அவர்களின் கார் சென்ற பிறகு கூச்சலிட்டனர்.
இதை மறுமலர்ச்சி திமுகவினர் தட்டிக் கேட்க முற்பட்டபோது, இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்தப் பிரச்சனை தொடர்பாக மதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இருதரப்பினரின் மோதலால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக, இரு கட்சியினர் மீதும் விமான நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கு 2-ஆவது கூடுதல் திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணைக்காக இன்று (16.07.2025) திங்கள்கிழமை காலை 10 மணிக்கு, திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மறுமலர்ச்சி திமுக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் பெல் இரா.இராசமாணிக்கம் மணப்பாறை வடக்கு ஒன்றியச் செயலாளர் ப.சுப்ரமணியன், முன்னாள் பகுதிச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர்.
வழக்கில் மூத்த வழக்கறிஞர் டி.ஏ.ஓம்பிரகாஷ், வழக்கறிஞர் ஷீலா ஆகியோர் நேர்நின்று விசாரணைக்கு உதவினார்கள்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில், வரும் 19.07.2025 சனிக்கிழமை அன்று நீதிபதி தீர்ப்பு வழங்கப் போவதாக அறிவித்தார்.
நீதிமன்ற விசாரணைக்கு மாவட்டச் செயலாளர்களுடன் தலைவரின் உதவியாளர் வெ.அடைக்கலம் , மாநில தேர்தல் பணி துணைச் செயலாளர் *SR.செந்தில்குமார் , திருச்சி மாநகர் மாவட்ட காந்தி மார்கெட் பகுதி செயலாலளர் *KP . மனோகரன் , காட்டூர் பகுதி செயலாளர் P . ஜெயச்சந்திரன் , பொதுக்குழு உறுப்பினர் அச்சகம் செல்வராஜ், திருவெறும்பூர் பகுதி செயலாளர் உ.சோமு, பொதுக்குழு உறுப்பினர் கோழிக்கடை துரைராஜ், 41வது வட்டச் செயலாளர் M . மாரியப்பன், பொன்மலை பகுதி *V.N.ராஜன்,K.இளங்கோவன், உறையூர் பகுதி செயலாளர் ஆசிரியர் முருகன் உள்ளிட்ட கழக வேங்கைகள் பங்கேற்றனர்.
