
பிளாட்டனம் விழா (70ம் ஆண்டு நிறைவு விழா) முன்னாள் மாணவியர் தொடர் சொற்பொழிவு, விலங்கியல் ஆராய்ச்சி துறை, சீதா லட்சுமி இராமசுவாமி கல்லூரி
திருச்சிராப்பள்ளி சீதா லட்சுமி இராமசுவாமி கல்லூரி பிளாட்டினம் விழாவின் ஒரு பகுதியாக விலங்கியல் ஆராய்ச்சி துறை 5 ‘நாள் முன்னாள் மாணவர் தொடர் சொற்பொழிவினை பெருமையுடன் ஏற்பாடு செய்துள்ளது. இந்த தொடரானது சிறப்பு மிக்க முன்னாள் மாணவியரின் திறன் மற்றும் உயிரியலின் பல்வேறு துறையில் அவர்களது ஆழ்ந்த அறிவினை பகிர்வதாகவும், அவர்களது விரிந்து பட்ட வாழ்வழிகள் மற்றும் துறையின் பட்டாதாரிகளுக்கு அவர்களது பங்களிப்பை வெளிகொணர்வதாக இருந்தது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் முன்னாள் பேராசிரியரும். பசுமை வாகையர் விருது பெற்றவருமானா முனைவர் ஜி.எஸ் விஜயலட்சுமி அவர்களின் உரையுடன் 21 ஜூலை 2025 அன்று தொடங்கியது. “வளங்குன்றா வாழ்வியல் வளங்களை பேணலில் வளங்குன்றா வாழியல் முறை என்ற தலைப்பில் ஆற்றிய உரை சுற்றுச்சூழல் மேலண்மையின் உய்யநிலை முக்கியத்துவை சுட்டிக்காட்டியது.
இதனை தொடர்ந்து ஜூலை 22, 2025 அன்று தைவான் நாட்டின் தேசிய பிங்க்டெளங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை கழகத்தின் பண்ணாட்டு கல்லூரியின் நீர்சார் விலங்குகளின் உடல் நலன் ஆய்வகத்தில் பயிற்சிப் பணியாளர் மிஸ் சுதர்ஷ்னி ஜெயராமன் நீர்உயிரிவளர்ப்பில் நுண்ணுயிர்க்கொல்லிகளின் நோய்தடுப்பு பங்களிப்பு என்ற தலைப்பில் இணைய வழியில் உரையாற்றினார். இவ்வுரை நீர்சார் விலங்குகளின் உடல் நலனில் மிக முக்கிய பிரச்சனைகளுக்கான தீர்வாகும்.

இங்கிலாந்து நாட்டின் லிவர் பூல் பல்கலை கழகத்தில் மேம்பட்ட உயரியல் ஆராய்ச்சி மேற்கொள்ளும் திருமதி கமலி குமார் இணைய வழியாக விலங்கியலிலிருந்து “புற்றுநோய் ஆராய்ச்சி: உயிரியலில் நோக்கத்தை கண்டறிதல்” எனும் தலைப்பில் ஆற்றிய உரை விலங்கியல் பின்னனியிலிருந்து புற்றுநோய் தொடர்பான மேம்பட்ட ஆராய்ச்சி நோக்கிய மாற்றத்திற்கு மதிப்புமிகு வழிகாட்டியாக இருந்தது
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் மூதறிவியல் விலங்கியல் மாணவியான அபிராமி முத்துகுமாரி ‘மார்பக புற்று நோயாளிகளில் பிஆர்சிஏ2 மரபணுவின் பல்வடிவுறுமை மதிபாய்வு மற்றும் அது தொடர்பான ஆக்சிகரண அழுத்த பகுப்பாய்வு” என்ற தலைப்பில் ஜூலை 24, 2025 அன்று ஆற்றிய இணைய உரை மனித உடல் நலனில் ஆராய்சியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது.
இந்த தொடரின் இறுதியாக ஜூலை 25, 2025ம் நாள் திருச்சி பாரதிதாசன பல்கலை கழகம் கடல்சார் அறிவியல் புலத்தில் தமிழ் நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் ஆய்வாளாரான சிந்துஜா செந்தில் குமரன் “ஒருங்கிணைந்த மீன்-நீர்தாவர வளர்ப்பு: ஆய்வுகளை மெய் உலக வேளாண்மையுடன் ஒருங்கிணைத்தல் எனும் தலைப்பில் ஆற்றிய உரை வளங்குன்றா வேளாண் நடைமுறைகளை விளக்குவதாக அமைந்தது.
இந்த முன்னாள் மாணவியர் தொடர் சொற்பொழிவு, அறிவு பரிமாற்றம் மட்டுமன்றி தற்போதைய மாணவியருக்கான உத்வேகம், பல்வேறு அறிவியல் புலன்களில் முன்னவர்களின் நேர்மறை தாக்கத்தை எற்படுத்தும் பங்களிப்பு நமது கல்லூரியின் கல்விசார் மேன்மை மற்றும் சமுதாய நல்லிருப்பிற்கான அர்பணிப்புக்கு தகுந்தார் போல இயைந்த தன்மையை பிரதிபலிப்பதாக அமைந்தது. மேலும் இந்த சொற்பொழிவுகள் உலகலாவிய குறிக்கோள்களான சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு. நீருக்கடியில் வாழ்வு. பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி, செயலுக்கான கூட்டாண்மை நிலப்பகுதிக்களின் வெளிக்கொணர்வதாகவும் அமைந்தது