
அமராவதி
நதிக்கரையினிலே
காதல் மன்னனாக
அமர்க்களமாக தோன்றி
அட்டகாசம் செய்தவனே
வேதாளமாய் பாயும் எதிரிகள் நடுவே சாம்ராட் அசோகாவாய் மாறி
வீரம் பறைசாற்றியவனே
உல்லாசமாய் வாழும் மனிதர் மத்தியில் ரசிகர்களுக்காக விசுவாசமாய் இருப்பவனே
அடக்க நினைப்பவர் எவர் வந்தாலும் நேர்கொண்ட பார்வையோடு
விவேகம் கொண்ட மதியோடு துணிவோடு பேசுபவனே
உன் விடாமுயற்சி எங்களைப் போன்ற பல்லாயிரம் ரசிகர்களுக்கு அது ஒரு விஸ்வரூப பயிற்சி
தலைக்கனம் இல்லா எங்கள் அன்பு தலையே
33 ஆண்டுகள் திரை வாழ்வியினிலே எவ்வளவோ வெற்றிகள் எவ்வளவோ தோல்விகள்
எவ்வளவோ வஞ்சகங்கள் எவ்வளவோ நம்பிக்கை துரோகங்கள் அத்தனையையும் துச்சமாக எண்ணி வீறு கொண்டு வெற்றி நடை போடும் எங்கள் ஏகே எனும் அன்பால் இதயங்களை கவர்ந்தவனே
50 ஆண்டுகள் அல்ல இன்னும் நூறு ஆண்டுகள்
திரை வானில் மட்டுமல்ல மக்களின் மனங்களிலும் அன்பு சாம்ராஜ்யத்தை உருவாக்கி
மக்கள் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் ஒரே சக்கரவர்த்தி எங்கள்
ஏ கே நீ மட்டும் தானே அய்யா
பட்டங்கள் உன்னை தேடி வந்த பொழுதும் அதை துச்சம் என ஒதுக்கினாய் ஆனால் பத்மபூஷன் எனும் உயர்விருதோ உன்னை நாடி வந்தது அதுதானே ஐயா உன் இலக்கணம்