முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று (07.08.2025) காலை 9:30 மணியளவில்,
புதுடெல்லியில், அண்ணா-கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவியும், மறுமலர்ச்சி திமுக சார்பில் நான் புகழ் வணக்கம் செலுத்தினேன்.
நூறாண்டு கடந்திருக்கிற திராவிட இயக்கத்தில் அரை நூற்றாண்டு காலம் தலைமை வகித்த பெருமை டாக்டர் கலைஞர் அவர்களுக்கு உண்டு.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி திராவிட இயக்கத்தை வழிநடத்திய தலைவர் கலைஞர் அவர்கள், ஐந்து முறை முதல்வர் பொறுப்பில் இருந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றியுள்ளார்.
காலத்தால் அழியாத காவியமாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
07.08.2025
புதுடெல்லி