
திருவெறும்பூர்: ஆக9
தமிழக மக்கள் நலன் பெனும் வகையில் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் மேலும் இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மக்களின் பயன்பாட்டிற்காக நடைபெற்று வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனியார் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் 27 மருத்துவ துறை சார்ந்த பிரிவுகள் கலந்து கொண்டு பொதுமக்களின் உடல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கு உண்டான நோய்களுக்கு சம்பந்தமான மருந்துகள் மற்றும் அதற்குத் தேவையான விளக்கங்கள் மருத்துவர்கள் வழங்கினர்.






மேலும் இந்த மருத்துவ முகாமில் இருதய நோய் காச நோய் கண் சிகிச்சை புற்றுநோய் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் என ஏராளமான துறைகளை சார்ந்த மருத்துவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நோய்கள் தீர்ப்பதற்கான தீர்வை விரிவாக எடுத்துரைத்தனர்
மேலும் இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் காச நோயாளிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் 10 பேருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் ஐந்து பேருக்கும் துப்புரவு தொழிலாளர்கள் சுமார் ஐந்து பேருக்கு தூய்மை நல வாரிய அட்டையையும் வழங்கினார் மேலும் இதனை அடுத்து முகாமை ஆய்வு மேற்கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சூரியூர் கிராமத்தை சேர்ந்த ஐந்து வயது, ரித்திக் என்ற இளைஞன் கால் ஊனம் ஏற்பட்டு பல ஆண்டு காலமாக சிரமப்பட்டு வந்த நிலையில் நடைபெற்ற முகாமில் உடனடியாக மருத்துவர்கள் அழைத்து இதற்கு உண்டான சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார் இதே போல் கட்டுரை சேர்ந்த மூன்று வயது தர்ஷிகா என்ற குழந்தைக்கு கன்னத்தில் பிறவியிலேயே கட்டியிருந்ததைக் கண்ட அவரது பெற்றோர்கள் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்தனர் இதனை அடுத்து மருத்துவரை அழைத்து இதற்கு உண்டான பரிசோதனை மேற்கொண்டு உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் என மருத்துவர்களிடம் எடுத்துரைத்தார்
மேலும் இந்த முகாமில் திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் மருத்துவக் கல்லூரி முதல்வர் குமரவேல்.மண்டலம் மூன்றின் தலைவர்
மு மதிவாணன், மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் கோபிநாத், மாவட்ட சுகாதார அலுவலர் ஹேமச்சந்திரன், மாநகராட்சி சுகாதார அலுவலர் விஜயசந்திரன்,
உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவராமன், மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம், தியாஹிதீன், செந்தில், கார்த்திக், ரெக்ஸ், மற்றும் மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் மாநகராட்சி மாவட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர் மற்றும் பல்வேறு பொதுமக்கள் கலந்துகொண்டு இம்மருத்துவ முகாமில் பயன் பெற்றனர்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி
எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முதல்வராக இருந்த பொழுது டெண்டர் விடுவதில் மட்டும்தான் கவனம் செலுத்தி கொண்டு இருந்தாரே தவிர தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்தவில்லை. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நான் தான் காரணம் என எந்த பெயரையும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி நினைத்து கூட பார்க்க கூடாது – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
மக்களுக்கான மிகப்பெரிய திட்டமாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் அமைந்துள்ளது.
நாட்டை காக்கும் ஸ்டாலின் தான் மாநில கல்வி கொள்கை.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் கல்விக்கு அடித்தள மிட்டு நல்ல முடிவுகளை கொடுக்க துவங்கி விட்டோம். அந்த அடித்தளத்தின் மேல் என்னென்ன செய்ய உள்ளோம் என்பதை தொலைநோக்கு பார்வையுடன் கூறி விட்டோம். தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையை அலசி ஆராய்ந்து மற்ற மாநிலங்களும் பின்பற்றினால் மாணவர்கள் உயர்நிலையை அடைவார்கள். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்த்துள்ளோம். மாணவர்கள் கனவு மட்டும் கண்டால் போதும் அதை நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம் எனக் கூறுவது தான் மாநில கல்விக் கொள்கை.
மாணவர்களுக்கு எந்தவித அழுத்தமும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளோம்.
தமிழ்நாடு இரு மொழிக் கொள்கைதான் பின்பற்றும் என முதல்வர் உறுதியாக கூறியுள்ளார் மூன்றாவது ஒரு மொழி அல்ல 22 ஆவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் படிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் ஆனால் எதையும் கட்டாயப்படுத்த கூடாது.
தமிழ் மொழி, தமிழ்நாடு கலாச்சாரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு நமக்காக தனித்துவமாக உருவாக்கப்பட்டது தான் மாநிலங்களுக்கு கொள்கை.
மாநில கல்விக் கொள்கையை அரசியல் காரணங்களுக்காக யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். மாநில கல்விக் கொள்கையால் என்ன பயன் என்பதை ஆராய்ந்து விட்டு அதன் பின் இது குறித்து பேசலாம்.
14 ஆண்டுகளுக்குப் பின்பு தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை தற்பொழுது தான் அடைந்துள்ளதாக ஒன்றிய அரசே கூறியுள்ளது. கலைஞர் ஆட்சிக்காலத்தில் 3.12 சதவீதமாக இருந்தது அதன் பின் அ.தி.மு.க ஆட்சியில் வெகுவாக குறைந்தது மீண்டும் திமுக ஆட்சி அமைந்த பின் 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த பொழுது பொதுப்பணி துறையையும் நெடுஞ்சாலை துறையையும் தன் வசம் வைத்துக் கொண்டு டெண்டர் விடுவதில் மட்டுமே அவர் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். நாட்டின் வளர்ச்சிக்கு அவர் கவனம் செலுத்தவில்லை ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்துகிறார். விளிம்பு நிலை மக்களுக்காக உழைக்கிறார். தமிழ்நாடு வளர்ச்சிக்கு தான் தான் காரணம் என எந்த ஒரு பெயரையும் எடப்பாடி பழனிச்சாமி தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்து கூட பார்க்க கூடாது என்றார்.