
மூத்தோர்களுக்கான பராமரிப்பு நடைபயணம் – “பொன்னான முதுமைக்கு கண்ணியமான கவனிப்பு காலமெல்லாம்! ”
திருச்சி எலும்பியல் சங்கம் (TOS) சார்பில், IOA எலும்பு & மூட்டு தினம் (ஆகஸ்ட் 4, 2025) மற்றும் எலும்பு & மூட்டு வாரம் (ஆகஸ்ட் 3–10, 2025) நினைவாக, நடைபயணம் 2025 ஆகஸ்ட் 10 ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணிக்கு அண்ணாநகர், திருச்சி உழவர் சந்தை இடமிருந்து துவங்குகிறது.


இந்த ஆண்டின் தலைப்பு “பொன்னான முதுமைக்கு கண்ணியமான கவனிப்பு காலமெல்லாம்! – மூத்தோர்களுக்கான 360° பராமரிப்பு” ஆகும். மூத்தோர்களின் எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம், சுதந்திரமான நடமாட்டம், கண்ணியம் மற்றும் நீண்ட ஆயுள் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. திருச்சி எலும்பியல் சங்கம் நடத்தும் இந்த நடைபயணத்தில் சுமார் 200 மூத்தோர் மற்றும் நோயாளிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூத்தோர்களின் நலனுக்காக அனைவரும் கலந்து கொண்டு சமூகத்தில் ஆரோக்கிய விழிப்புணர்வை பரப்புமாறு TOS அழைக்கிறது.