NTT TAMIL

Current Date and Time
Loading...

ஸ்ரீரங்கம் புலி மண்டபம் சாலையில் இன்று மாலை சுமார் ஆறு மணி அளவில் மழையின் காரணமாக வேப்பமரம் ஒன்று முறிந்து விழுந்தது அதன் காரணத்தினால் நகர் முழுவதும் மின் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் மின்வாரிய பணியாளர்களுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று கொட்டும் மழையிலும் தங்கள் உயிரை துச்சம் என மதித்து மின்விநியோகம் சீர் பெறுவதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்தனர் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி முறிந்து விழுந்த வேப்ப மரத்தை அகற்றியதோடு அதன் காரணமாக அறுந்து கிடந்த மின் கம்பிகளை சரி செய்து நகரில் மின்சாரம் சீராக கிடைப்பதற்கு வழிவகை செய்தனர் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் தன்னலம் கருதாத இந்த பணியை ஸ்ரீரங்கம் நகர மக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்

Related Posts

POST MY ADD