இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி மின்சார வாரிய விதிகளின்படி மின்சாரம் பெறுவதற்கு உரிமை இருந்தும் 75 வயதான விதவை மூதாட்டிக்கு மின்சார இணைப்பு வழங்காமல் அலைக்கழிக்கும் மின்சார வாரிய அதிகாரிகள்.
இந்தியன் ஒருவன் நிலவிற்கு சென்று ஆராய்ச்சி செய்து விட்டு வந்திருக்கிறான், ஆனால் தமிழகத்தில் கிட்டத்தட்ட 35 குடும்பம் கடந்த 16 வருடமாக மின்சாரம் இல்லாமல் அல்லல் பட்டு வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமம் நந்தவனம் எந்த இடத்தில் செண்பகவல்லி என்ற எழுபத்தைந்து வயது ஆன மின்சார வாரிய பென்ஷன் பெரும் விதவை மூதாட்டி மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ளார்.
மின்சார வாரிய சட்டம், டிஸ்ட்ரிபியூஷன் கோடின்படி இடத்தின் உரிமையாளரின் அனுமதி இன்றி மின்சாரம் பெறலாம் என்று சொல்கிறது. இங்கு திருப்பராய்த்துறை மின்வாரிய அதிகாரிகள் உரிமையாளரிடம் NOC, அனுமதி வாங்கி வர சொல்கிறார்கள். என்ஓசி கொடுக்காமல் வாடகையும் வாங்காமல் அறநிலையத்துறை அலைக்கழிக்கிறது.
முழுமையான விவரங்களுக்கு இத்துடன் இணைக்கப்பட்ட கடிதத்தை பார்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
https://drive.google.com/file/d/1QE7Qn7uHLU9bnpKdxrDpnBPbDkX6VxBW/view?usp=drive_லிங்க்
தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி & மின்சார வாரிய விதிமுறைகளின் படி மின்சாரம் கொடுக்க முடியும் ஆனால் மின்சாரம் தராமல் மின்சார வாரிய அதிகாரிகள் அலைக்கழிக்கிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 14 & 21 ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் மரியாதையுடன் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது என்று சொல்கிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களுக்காக, ஏழைகளுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இந்த ஒரு ஏழை மூதாட்டிக்கு மின்சாரம் கொடுப்பதன் மூலம் அவரது பெயர் வரலாற்றில் இடம்பெறும். இந்த 35 குடும்பமும் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் வாழ்நாள் முழுக்க நமது முதல்வர் ஸ்டாலின் அவர்களை மறக்க மாட்டார்கள்.
தயவு செய்து இத்துடன் இணைக்கப்பட்ட விண்ணப்பத்தை படித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து தீராத பிரச்சனையை தீர்த்து இந்த ஏழை மூதாட்டிக்கு மின்சாரம் வழங்கிட ரிக்கை வைக்கப்படுகிறது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பாளர்களாக இருந்தவர்களுக்கு மின்சாரம் கொடுக்க சொல்லி கோட்டு போட்ட உத்தரவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமித்துக்காரர்கள் என்பது வேறு மின்சாரம் கொடுப்பது என்பது வேறு இரண்டும் வேற வேற துறைகள் செய்ய வேண்டிய பணிகள்,இரண்டிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. *ஆக்கிரமிப்புகளை நீக்கும் பொழுது மின்சார இணைப்பையும் நீக்கிக் கொள்ளலாம் என்கிறது ஹை கோர்ட் உத்தரவு Madras High court Order
W.P.Nos. 7135 of 2014
https://drive.google.com/file/d/1kwQWHYY5gD1ugVwbEyQD3jCXpznD8r7Q/view?usp=drive_linkMadras High court Order “ W.P.Nos. 17608 of 2013
https://drive.google.com/file/d/16u2ywwh8KsL2QnM0GH3rE_8AdeG8pcvq/view?usp=drive_link


