இன்று (19.08.2025) மாண்புமிகு ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ராம் மோகன் நாயுடு அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி விமான நிலையத்தில் International-to-International transit வசதியை மீண்டும் அமல்படுத்துவதற்கான கோரிக்கை கடிதத்தை கொடுத்து, அதுகுறித்த தகவல்களை வழங்கினார் துரை வைகோMP.

அதில், திருச்சி விமான நிலையம் சமீப காலங்களில், கணிசமான எண்ணிக்கையிலான சர்வதேச விமான சேவைகளை திறம்பட கையாண்டு, வேகமாக வளர்ச்சியடையும் விமான நிலையமாக திகழ்வதை சுட்டிக்காட்டினார்..
சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா, அபுதாபி, தம்மாம், தோஹா மற்றும் குவைத் போன்ற இடங்களுக்கு நேரடி இணைப்பு வசதியுடன், திருச்சி விமான நிலையம் தென்னிந்தியாவில் ஒரு முக்கிய International-to-International transit மையமாக செயல்படுவதற்கு தனித்துவமான புவி அமைப்பில் இடம் பெற்றுள்ளதையும், திருச்சி புதிய ஒருங்கிணைந்த முனையம் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளதையும் சுட்டிக்காட்டி,
இருப்பினும், International-to-International transit வசதி இன்மை, இந்த விமான நிலையம் தனது முழு திறனை அடைவதற்கு தடையாக உள்ளதாக கூறினார்.
பழைய முனையத்தில், துபாய் மற்றும் சிங்கப்பூர் இடையே பயணிக்கும் பயணிகளுக்கு திருச்சி வழியாக International-to-International transit வசதி வழங்கப்பட்டது. ஆனால், 2024 ஜூன் மாதம் புதிய முனையம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் இந்த International-to-International transit வசதி நிறுத்தப்பட்டது. இந்த வசதியை மீண்டும் அமல்படுத்துவது, பயணிகளுக்கு சர்வதேச இடங்களுக்கு இடையே திருச்சி வழியாக தடையின்றி பயனிப்பதற்கு உதவுவதோடு, விமான நிறுவனங்களின் பங்களிப்பு விகிதத்தை மேம்படுத்தி, விமான நிலையத்தின் வர்த்தக மற்றும் பயணிகள் இயக்கத்தில் முக்கிய பங்காற்றும் என்றும் எடுத்துரைத்தார் துரை வைகோ.
திருச்சியில் உள்ள புதிய ஒருங்கிணைந்த முனையம், அதிகரித்துவரும் சர்வதேச பயணிகள் போக்குவரத்தை கையாளும் வகையில் தயாராக உள்ளது. எனவே இங்கு International-to-International transit வசதியை மீண்டும் அமல்படுத்துவது, பயணிகளுக்கு வசதியை பெருமளவில் மேம்படுத்துவதோடு, இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் விளக்கினார்.
எனவே, திருச்சி விமான நிலையத்தில் International-to-International transit வசதியை விரைவில் மீண்டும் அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு அமைச்சரை கேட்டுக்கொண்டார் துரை வைகோ MP.
இறுதியாக, கடந்த 12.08.2025 அன்று அமைச்சரை சந்தித்து, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வான்வழி விரைவஞ்சல் சரக்கு (Air Courier Cargo) வசதியை செயல்படுத்த வேண்டி கோரிக்கை கடிதம் கொடுத்ததை நினைவூட்டி. அதற்கு, விரைவில் பதில் அளிப்பதாக கூறினீர்கள், என்றார். இன்னும் ஒரு சில நாட்களில் அதற்கான பதிலையும் இன்றைய திருச்சி விமான நிலையத்திற்கான International-to-International transit கோரிக்கைக்கு மேற்கொள்ள உள்ள நடவடிக்கை குறித்தும் தகவலை வழங்குவதாக அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார். .
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
19.08.2025
புதுடெல்லி
3 Comments
Your blog is a true hidden gem on the internet. Your thoughtful analysis and in-depth commentary set you apart from the crowd. Keep up the excellent work!
Thanks I have just been looking for information about this subject for a long time and yours is the best Ive discovered till now However what in regards to the bottom line Are you certain in regards to the supply
Ive read several just right stuff here Certainly price bookmarking for revisiting I wonder how a lot effort you place to create this kind of great informative website