
ரஷ்யா- உக்ரைன் போரில் வலுக்கட்டயமாக ஈடுபடுத்தபட்டுள்ள இந்தியர்களை மீட்க சபை ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருக!
மக்களவை செயலாளருக்கு மனு!
பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட திரு. கிஷோர் சரவணன் உள்ளிட்ட இந்தியர்களின் உயிர்கள் காப்பாற்றபட வேண்டும் என்ற எண்ணற்ற தொடர் முயற்சிகளில ஈடுபட்டு வருகிறேன்.

இப்பிரச்சனை தொடர்பாக 15 கட்சிகள் மற்றும் 68 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்து பெற்று
பிரதமர் மோடி அவர்களுடன் சந்திப்பு,,
வெளியுறவு அமைச்சர், வெளியுறவு துறைச் செயலாளருடன் சந்திப்பு, ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் தூதருடன் சந்திப்பு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுடன் சந்திப்பு போன்ற என் முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தேன் இதன் விளைவாக இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் என்னை சந்தித்து எங்கள் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்று முறையிட்டார்கள்.

இந்திய நாடாளுமன்றத்தில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தில் விவாதிக்க சபையின் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, பிரச்சனைக்குரிய ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துவதுதான் சபை ஒத்திவைப்பு தீர்மானம்.
வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் படி 126 இந்தியர்கள் தமிழ்நாடு உத்திரபிரதேஷ், மகாராஷ்டிரா, பஞ்சாப், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து ரஷ்ய இராணுவ படையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது அவர்களில் 13 பேர் தவிர, 16 பேர் காணவில்லை, 12 உயிர் இழந்துள்ளார்கள் என்ற தகவலை சுட்டிகாட்டி, ரஷ்ய போரில் சிக்கியுள்ள இந்தியர்களின் உயிரை காக்க நாடாளுமன்றம் இனியும் அமைதியாக இருக்ககூடாது, ஆகவே சபை ஓத்திவைப்பு தீர்மானம் நிறைவேற்றி இப்பிரச்சனை குறித்து விவாதிக்கபட வேண்டும் என்று இன்று (20.08.25) மக்களவை செயலளருக்கு அனுப்பியுள்ள சபை ஒத்திவைப்பு தீர்மானம் கோரிய மனுவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

எளிய மக்களின் கண்ணீரை துடைக்க, துயர் போக்க இறுதிவரை போராடுவேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
20.08.2025
புதுடெல்லி