
விருகம்பாக்கத்தில் பைக் திருட்டு
சென்னை விருகம்பாக்கம் வெங்கடேச நகரில் நேற்று நள்ளிரவில் வீட்டின் உள்ளே நிறுத்தி வைத்திருந்த Yamaha R15 இருசக்கர வாகனம் திருட்டு இது குறித்து விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் காவல்துறையில் புகார் அளித்தும் விருகம்பாக்கம் காவல்துறை சிசிடிவி காட்சிகளை கூட ஆய்வு செய்யாமல் அலட்சியம் செய்து வருவது குறிப்பிட்டத்தக்கது.

இருசக்கர வாகனம் திருட்டு போய் பல மணி நேரம் கடந்தும் சம்பவ இடத்திற்கு குற்றப்பிரிவு காவலர்கள் வரவில்லை என்பது விருகம்பாக்கம் காவல்துறையின் பொறுப்பற்ற செயலை காட்டுகிறது. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தவர் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.