
கடந்த ஆறு ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத ஆறு அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்களை வருகின்ற 28ஆம் தேதி அன்று நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலில் போட்டியிட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் மகன் துரை வைகோ அவர்கள் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக இந்தியா கூட்டணி சார்பில் களமிறங்கினார்.

இந்தியா கூட்டணியின் தமிழக தலைமை கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் மதிமுகவை தங்களது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு வற்புறுத்தியது.

ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத துரை வைகோ அவர்களுக்கு பம்பர சின்னம் அவருக்கு வழங்கப்படாத காரணத்தினால் சுயேசையாக தேர்தல் ஆணையம் தரும் சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று உறுதியாக நின்றார்.

அதன் பயனாக அவருக்கு தேர்தல் ஆணையம் தீப்பெட்டி சின்னத்தை வழங்கி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி அளித்தது. அவரும் பாராளுமன்ற தேர்தலில் தனக்கு வழங்கப்பட்ட தீப்பெட்டி சின்னத்தில் வாக்காளர்களிடையே வாக்குகளை சேகரிக்க தொடங்கினார்.

தங்களது உதயசூரியன் சின்னத்தில் நிற்காமல் சுயேசையாக ஒரு சின்னத்தில் அவர் தேர்தலில் போட்டியிட்ட காரணத்தினால் ஆரம்பத்தில் அவருக்கு சரியான ஆதரவு அளிக்காமல் இருந்த திமுக நிர்வாகிகளும் அமைச்சர்களும் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலை கருத்தில் கொண்டு துரை வைகோ அவர்களின் வெற்றிக்காக செயல்பட தொடங்கினர்.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதியில் துரை வைகோ அவர்கள் அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகினார்.

அன்றைக்கு மட்டும் துரை வைகோ அவர்கள் தங்களுடைய மதிமுகவிற்கு தனியாக சின்னம் கோராமல் திமுகவின் கட்டளையை ஏற்று உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டிருந்தார் என்றால் இன்றைக்கு அந்த ஆறு கட்சிகளோடு சேர்ந்து மதிமுகவும் தன்னுடைய அங்கீகாரத்தை இழக்கும் சூழல் நிச்சயமாக உருவாகி இருக்கும். ஆனால் மதிநுட்பம் கொண்ட துரை வைகோ அவர்கள் தன் தந்தையிடம் தெளிவாக எடுத்துக் கூறி கட்சியின் நலனையும் கட்சியின் வளர்ச்சியையும் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொண்டு எந்த விதமான உத்தரவுகளுக்கும் கீழ்படியாமல் துணிந்து சுயேசையாக இந்தியா கூட்டணியின் வேட்பாளராக களம் இறங்கினார்.

அன்றைய அவரின் சமயோசித புத்தியானது அவர் ஒரு தேர்ந்த அரசியல் தலைவர் என்பதை இன்று நிரூபித்து இருக்கின்றது. ஆம் இன்றைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் துரை வைகோ அவர்களின் வெற்றியினால் தன்னுடைய கட்சி அந்தஸ்தை பலப்படுத்தியுள்ளது. இந்த சூழலில் குறைந்தபட்சம் ஆறு தொகுதிகள் ஆவது மதிமுக நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே கட்சியின் அங்கீகாரம் நிலைத்திருக்கும்.

என்ன செய்யப் போகின்றார் துரை வைகோ பொறுத்திருந்து பார்ப்போம்.