

திருவெறும்பூர் தொகுதியில் திருவெறும்பூர் பகுதி மக்களுக்காக அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையுடன் இனைந்து நடைபெறும் மருத்துவ முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் துவக்கி வைத்தார்.
திருவெறும்பூர் நவல்பட்டு ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இம்முகாம் நடைபெற்று வருகிறது இம்முகம்மிணை திருவெறும்பூர் பகுதி மக்கள் பங்குபெற்று பயன் பெற்று வருகின்றனர்.
முகாமில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் சரிபார்த்தல், இசிஜி எடுத்தல், நுரையீரல் பரிசோதனை நடைபெறுகிறது பொது மருத்துவர் ஆலோசனை வழங்கப்படுகிறது . முகாமில் அன்பில் அறக்கட்டளையின் சார்பாக முதலுதவி பெட்டி வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர்
மு.மதிவாணன் மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் பகுதி கழகச் செயலாளர் சிவக்குமார் மாமன்ற உறுப்பினர் நீலமேகம் மருத்துவர்கள் சுரேஷ், தமிழரசன், வட்டக் கழகச் செயலாளர்கள் அப்பு கருணாநிதி, வி.பி கர்ணாகரன், வினோத் கனகராஜ், செல்வராஜ், குணாநிதி, அருண்குமார், கயிலைநாதன், புண்ணிய மூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.