
செக்கிழுத்த செம்மல் அய்யா வ.உ.சி. அவர்களின் 154-வது பிறந்தநாளில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினேன்.

நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியதால் அவர் சிறைக் கொட்டடியில் பூட்டப்பட்டு, செக்கிழுத்து பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார். அதனால் அவர் செக்கிழுத்தச் செம்மல் என்று அழைக்கப்பட்டார்.

ஆங்கிலேயர்களின் வணிகத்தை தடுத்து நிறுத்திட முதல் சுதேசிக் கப்பலை கடலில் செலுத்தியதால், அவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார்.
வ.உ.சி. அவர்கள் பௌத்தம், சைவம், கிறித்தவம், இசுலாம் என அனைத்து நூல்களையும் எழுதினார். அய்யா வ.உ.சி. அவர்கள் மதச்சார்பின்மைக்கு அடையாளமாகத் திகழ்ந்தார்.

திருச்சியில் இன்று (05.09.25) காலை 9 மணியளவில் செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 154-ஆவது பிறந்த நாளையொட்டி, திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மறுமலர்ச்சி திமுக சார்பிலும், இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் சார்பிலும் மாலை அணிவித்து, புகழ் வணக்கம் செலுத்தினேன்.
முன்னதாக திரு.ஆர்.வி.ஹரிஹரூன் பிள்ளை அவர்கள் என்னை பட்டாடை அணிவித்து வரவேற்று அன்பு காட்டினார்.

இந்த நிகழ்வில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா.சோமு, டி.டி.சி.சேரன்,
மணவை தமிழ்மாணிக்கம் மற்றும் திரளான கழகத்தினர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்
மறுமலர்ச்சி திமுக
05.09.2025
திருச்சி.