
இன்று ஸ்ரீரங்கம் 7வார்டில் தூய்மை பணியாளர்களுக்கு “தூய்மை சேவைக்கான விருந்தோம்பல்” என்னும் நிகழ்ச்சியை திருச்சி சக்சஸ் ரோட்டரி சங்கம் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் 7 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதா அவர்களுடன் இனைந்து ஒருங்கிணைத்தது.

அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பற்றி விளக்கிக் கூறியும் அவர்களுக்கான சேமிப்பு முறை பற்றியும் விளக்கப்பட்டது மற்றும் அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது .இந்நிகழ்ச்சியை ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளர் ராம்குமார் துவக்கி வைத்தார் ,

வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

்திருச்சி சக்சஸ் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஹரிஹரன், மோகன்ராஜ் மற்றும் அக்தர்சஷக் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




