NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் பிங்க் அக்டோபர் முன்னிட்டு ஜீன் கவுன்சிலிங் கேம்ப்

திருச்சி, அக். 6: “பிங்க் அக்டோபர்” மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, திருச்சி நாகமங்கலத்தில் அமைந்துள்ள ஹர்ஷமித்ரா புற்றுநோய் & மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இன்று இலவச ஜீன் கவுன்சிலிங் முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக டாக்டர் ஜி. சுவதி (M.B.B.S., உதவி அறுவை சிகிச்சை நிபுணர், அரசு முதன்மை சுகாதார மையம், நாகமங்கலம்) கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தார். ஜீன் கவுன்சிலர் டாக்டர் தட்சிணா மூர்த்தி ஜனனி (M.Tech, Ph.D., Post Doctorate in Genetic Engineering) தலைமையில், பல பெண்களுக்கு மரபணு ஆலோசனையும் விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

ஜீன் கவுன்சிலிங் மற்றும் மார்பகப் புற்றுநோய் தடுப்பு: மார்பகப் புற்றுநோய் சிலருக்கு குடும்ப மரபு காரணமாக ஏற்படக்கூடியது. தாய், சகோதரி, பாட்டி போன்ற நெருங்கிய உறவினர்களுக்கு இந்த நோய் இருந்தால், அதே குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் அபாயம் அதிகரிக்கும். இந்த அபாயத்தை முன்கூட்டியே கண்டறிவதற்காக ஜீன் கவுன்சிலிங் பரிசோதனை அவசியம். இதில் BRCA1, BRCA2 போன்ற மரபணுக்களில் மாற்றம் உள்ளதா என்பதை அறிந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம். இதன் மூலம் பெண்கள் தங்கள் குடும்ப மரபை அறிந்து, புற்றுநோயை ஆரம்பத்திலேயே தடுக்கும் வாய்ப்பு பெறுகிறார்கள். இதுவே ஹர்ஷமித்ரா மருத்துவமனை நடத்திய இலவச ஜீன் கவுன்சிலிங் முகாமின் முக்கிய நோக்கமாகும்.

நிகழ்ச்சியில் மருத்துவர்கள் தெரிவித்ததாவது: “மார்பகப் புற்றுநோய் என்பது ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்தக்கூடியது. அதற்காக மக்கள் விழிப்புணர்வுடன் தங்களைச் சோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த மாதம் முழுவதும் ‘பிங்க் அக்டோபர்’ விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறும்” என தெரிவித்தனர்.
இலவச முகாமில் பல பொதுமக்கள், பெண்கள், மற்றும் நோயாளிகள் கலந்து கொண்டு ஜீன் ஆலோசனையினைப் பெற்றனர்.

ஹர்ஷமித்ரா மருத்துவமனை – பல வருடங்களாக “பிங்க் அக்டோபர்” முன்னிட்டு மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பல்வேறு கோணங்களில் சமூகத்தின் இடையே விதைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

POST MY ADD