
கேரியில் கலக்கிய தமிழ் பசங்க படகு குழு, தமிழக பெருமையை நிலைநாட்டி சாதனை படைத்துள்ளது.!
கேரியில் நடைபெற்ற ஆசியா விழாவின் 10வது ஆண்டில், எங்கள் ‘தமிழ் பசங்க’ டிராகன் படகு (Dragon Boat) குழு பங்கேற்று முதல் முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. 2023 ஆம் ஆண்டு தொடங்கிய ‘தமிழ் பசங்க’ குழு, வெறும் இரண்டு ஆண்டுகளில் வெள்ளிப் பதக்கம் வென்று, தமிழர் சமூகத்தை முன்னிறுத்தி, ஆசியா விழாவில் அங்கீகாரம் பெற்றிருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
மேலும் தமிழக மக்களிடையே இது பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது,தமிழக மக்கள் எப்போதும் விளையாட்டு என்பதில் முன்னுரிமை அளித்து வருவதே இதுபோன்ற போட்டிகளில் வெற்றி அடைய பெரும் பங்கு வகிக்கிறது,.
தமிழ் பசங்க குழு இந்த வெற்றியின் முலும் இன்னும் பல சிறுவர்கள்,சிறுமிகள்,மற்றும் இளைஞர்கள் மத்தியில் முன்னுதாரணமாக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகம் இல்லை கடல் தாண்டி கடலிலேயே சவாலை எதிர் நோக்கும் சாவல்களில் இனி தமிழகம் தான் முதலிடத்தில் வகிக்கப்போகிறது.!



