NTT TAMIL

Current Date and Time
Loading...

🙏சிந்திப்போம்🙏 ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கத்தின் தாழ்மையான வேண்டுகோள்…..
ஸ்ரீரங்கம் என்பது பூலோக வைகுண்டம் என போற்றப்படும் புண்ணிய ஸ்தலம். இதில் இறப்பவர்கள் அனைவருமே சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பது ஐதிகம்.


அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ஸ்ரீரங்கம் மாநகர வீதிகளில் இப்படி இறந்தவர்களின் இறுதி ஊர்வலத்தின் போது நாம் தெருவில் – மின்கம்பிகளில் – மின் டிரான்ஸ்பார்ம்களில் இப்படி பூக்களை வீசிச் செல்வதால் யாருக்கு லாபம் – யாருக்கு நஷ்டம் என்பதை சிந்தியுங்கள்…
இப்படி இறுதி ஊர்வலங்களில் பூக்களை தாறுமாறாக வீசிச் செல்வதால் யார் பாதிப்படைகிறார்கள்? நினைத்து பாருங்கள்…


இதனால் இறந்தவர்கள் எழுந்து வரப்போவதில்லை…. இதனால் பாதிப்படையும் பொதுமக்கள் இறந்தவரையும் – இறந்தவர் குடும்பத்தையும் சாபம் விட்டுத் தான் போவார்கள்.
எனவே இது போன்ற நடைமுறைகளை தவிர்க்க மாநகராட்சி நிர்வாகமும் – காவல் துறையும் – மின்சாரத் துறையும் இணைந்து ஒரு துணிச்சலான – கடுமையான நடவடிக்கையை எடுக்க முன்வர வேண்டும் . இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க வேண்டுமானால்
தனிமனிதன் திருந்தாவிடில்… இந்த சமுதாயத்தை திருத்த முடியாது.
பொது நலன் கருதி …..
மக்கள் விழிப்புணர்வுக்காக வெளியிடுவோர் –
ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் – தொடர்புக்கு -9952875881.

Related Posts

POST MY ADD