
திருச்சி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வ.உ.சி நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவிப்பு
மாவட்ட செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சுகந்திர போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று 18/11/2025 செவ்வாய் கிழமை காலை 11 மணியளவில் திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள வ.உ.சி அவர்களின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவிக்கும்
நிகழ்வில் மாநில மாவட்ட – மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட கழக செயலாளர்கள் – நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி .



