NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ இன்று (21.11.2025) ஒரே நாளில் திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் மூன்று முக்கிய மக்கள் நலத்திட்டங்களை திறந்து வைத்தார்.

மாலை 4 மணிக்கு திருச்சி மாநகராட்சி வார்டு எண் 5-ல் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையை மாணவ-மாணவியர், பெண்கள், முதியோர் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் திறந்து வைத்தார்.

மாலை 5 மணிக்கு திருவரங்கம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.6.60 இலட்சம் மதிப்பிலான இரு உயிர்காக்கும் டிஃபிப்ரிலேட்டர் கருவிகளை (ஒன்று External Pacemaker உடன், மற்றொன்று Real-time CPR Feedback உடன்) அவசர சிகிச்சைப் பிரிவு, ICU, 108 ஆம்புலன்ஸ் ஆகியவற்றில் பயன்படுத்துவதற்காக வழங்கி தொடங்கி வைத்தார்.

இக்கருவிகள் “தங்க நிமிடங்களில்” உயிர் காக்கும் என மருத்துவர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.

மாலை 6.30 மணிக்கு அந்தநல்லூர் ஒன்றியம் கம்பரசம்பேட்டையில் பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் ரூ.6 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட மற்றொரு பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார்.

மூன்று நிகழ்வுகளிலும் பொதுமக்களும் மருத்துவர்களும் துரை வைகோவுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள் கோரிக்கைகளை நேரில் ஆய்வு செய்து, தேவைக்கேற்ப முன்னுரிமை அளித்து உடனடியாக நிறைவேற்றும் அவரது பாணியை மக்கள் பெரிதும் பாராட்டினர்.

“மக்களின் கோரிக்கை வரும்போதெல்லாம் எனது தொகுதி அலுவலகப் பணியாளர்களை அனுப்பி, நேரில் சென்று ஆய்வு செய்து, உண்மையான தேவையை உறுதிப்படுத்திய பின்பே திட்டங்களை செயல்படுத்துவது எனது வழக்கம்” என்று துரை வைகோ தெரிவித்தார்.

Related Posts

POST MY ADD