
161 நாளில் 17வது சட்டமன்றம்:
முதல்வரின் 181வது வாக்குறுதி பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தரம் என்னாச்சி?
12 ஆயிரம் குடும்பங்கள் கண்ணீர் :
இப்போ இல்லனா எப்போ?
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தல் :
தற்போதைய 16வது சட்டமன்றத்தின்
5 ஆண்டு காலம் அதாவது 1825 நாட்களில் இதுவரை 1665 நாட்கள் முடிந்துவிட்டது.
இன்னும் 161 நாட்களில் அடுத்த சட்டசபை தேர்தல் நடத்தி 17வது சட்டமன்றம் செயல்படும்.
இதில் பிப்ரவரி மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அதில் இருந்து மார்ச், ஏப்ரல் மாதங்கள் மற்றும் மே மாதம் முதல் வாரம் வரை தேர்தல் விதிமுறைகள் அமுலில் இருக்கும்.
எனவே நடக்கின்ற நவம்பர் மற்றும் டிசம்பர், ஜனவரி மாதங்களே முழுமையாக ஆட்சி அதிகாரம் முதல்வர் ஸ்டாலின் கையில் இருக்கும்.
அதற்குள் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தேர்தலில் கொடுத்த 181வது வாக்குறுதியான பணிநிரந்தரத்தை எப்பாடு பட்டாலும் முதல்வர் ஸ்டாலின் செய்து முடிக்க வேண்டும்.
இதற்காக திமுக அமைச்சரவையில் கொள்கை முடிவை முதல்வர் எடுத்து அறிவிக்க வேண்டும்.
12 ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்க முதல்வர் இதை செய்ய வேண்டும்.
10 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுவந்த பகுதிநேர ஆசிரியர்களை திமுக தேர்தல் வாக்குறுதிபடி பணி நிரந்தரம் செய்யாமல் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு அதுவும் உதவித்தொகையாக 2,500 ரூபாய் வழங்கப்படுகிறது.
இதனால் கிடைக்கின்ற இந்த 12,500 ரூபாயை வைத்துக் கொண்டு இன்றைய விலைவாசியில் குடும்பத்தை நடத்த முடியவில்லை.
மே மாதம் சம்பளம், பணிக்கால மரணம், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, போனஸ் போன்றவைகூட இல்லாமல் பல ஆண்டுகளாக பரிதவித்து வருகின்றார்கள்.
எதிர்கட்சியாக திமுக வைத்த கோரிக்கையை, பின்னர் வாக்குறுதியாக கொடுத்துவிட்டு, இப்போது ஆட்சியில் இருக்கின்ற போது செய்யாமல் வேறு எப்போது செய்வீங்க என தமிழ்நாடு முழுவதும் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்களின் வேதனை குரல் முதல்வருக்கு கேட்கவில்லையா?.
எனவே தொகுப்பூதியத்தை கைவிட்டு காலமுறை சம்பளம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.
—
S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல்: 9487257203



