NTT TAMIL

Current Date and Time
Loading...

திருப்பராய்த்துறை பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து தர விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்த வண்ணம் இருக்கின்றனர். இது தொடர்பாக இன்று ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு பழனியாண்டி அவர்களை சந்தித்து விவசாயிகள் சார்பாக விவசாயி TN ராஜசேகர் மற்றும் TNB பிரகாசமூர்த்தி மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருப்பராய்த்துறை மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் மனு கொடுத்தனர். உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

விவசாயிகளின் கோரிக்கையில்,
” திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பராய்த்துறை ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் முதல்வரின் முகவரி மூலம் கோரிக்கை வைத்ததால், காணாமல் போயிருந்த, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பல பாசன வாய்க்கால்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தூர் வாரி தரப்பட்டன. இந்த வருடம் கிட்டத்தட்ட 32 கிலோமீட்டர் பாசன வாய்க்கால்கள் வேளாண் பொறியியல் துறையால் தூர் வாரி தரப்பட்டன. முக்கொம்பு ஆற்று பாதுகாப்பு பிரிவால் 15 கிலோமீட்டர் வாய்க்கால்கள் தூர் வாரி தரப்பட்டன.

ஸ்ரீரங்கம் வருவாய் துறை மூலம் நில அளவையர்கள் வந்திருந்து, 10கிலோமீட்டர் பாசன வாய்க்கால்களை அளந்து ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து எல்லை கற்கள் நட்டு படிவம் ஒன்று வழங்கியதால், அவற்றை மீட்பதற்கான பணியில் ஆற்று பாதுகாப்பு பிரிவு முழு வீச்சில் இறங்கியுள்ளது.

திருப்பராய்த்துறையில் உள்ள வேளாண்மை தொடக்க கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளுக்கு உரிய ஆவணங்களின் அடிப்படையில் அவர்களது விருப்பத்திற்கு ஏற்றார் போல் வட்டி இல்லாத விவசாய கடன்கள் வழங்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு போதுமான உரங்களும் இடுபொருள்களும் தங்கு தடை இன்றி கிடைக்கின்றன.

திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் முன்னே எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் அனைத்து விவசாய நிலங்களிலும் விவசாயம் செய்யப்பட்டு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆகவே விவசாயிகளுக்கு உதவி செய்யும் பொருட்டு திருப்பராய்த்துறை பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும்.

மேலும், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கு கீழ்காணும் இடங்களில் ஏதேனும் ஒரு தகுதி உடைய இடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்

  1. திருப்பராய்த்துறை சந்தை கூடும் பகுதி,
  2. சிவன் கோயில் நூற்றுக்கால் மண்டபம்,
  3. வீராண்டி அம்மன் கோயில்,
  4. எலுமினாட்சி அம்மன் கோயில்,
  5. விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு திடல்,
  6. தபோவனப் பள்ளியின் விளையாட்டு திடல் / நாடக மேடை
  7. அணலை பஞ்சாயத்து கட்டிடம் / சமுதாயக்கூடம்
  8. பெருகமணி காளி கோயில், சமுதாயக்கூடம்
  9. அந்தநல்லூர் கோயில், சமுதாயக்கூடம் ” என்று தெரிவித்துள்ளனர்

Related Posts

POST MY ADD