
ஸ்ரீரங்கம் டிச : 20
ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை காவேரி பாலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோவிலில் ஹனுமன் ஜெயந்தி மகோத்சவ விழா இன்று 19.12.2027 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு 10 ஆயிரத்து எட்டு வடமாலை ஆஞ்சநேயருக்கு சாற்றுப்படி செய்யப்பட்டு திரளான பக்தர்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிசனம் செய்தார்கள். மகா அன்னதானமும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஹனுமன் பிரசாதத்தை பெற்றுக் கொண்டனர் . மேலும் இன்று மாலை 6:00 மணி அளவில் 10,008 ஜாங்கிரி மாலை சாற்றுப்படி மற்றும் மகா அன்னதானமும் நடைபெறுகின்றது. இந்த வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரின் பிரசாதத்தை பெற்று பயனடைந்தார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு பரம்பரை நிர்வாகிகள் பூபாலன், சூரிய பிரகாஷ் மற்றும் விழா குழுவினர் சிறப்புர ஏற்பாடு செய்திருந்தார்கள்.



