NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமம் சர்வே எண் 203ல் வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை ஆவணங்களின்படி 100சென்டுக்கு மேல் அரசாங்க நிலம், எலமனூர் அண்ணா நகர், ஒத்த தெருவிற்கு அருகில் இருப்பது தெரியவந்துள்ளது. அரசாங்க நிலத்தை தகுதியுடைய ஏழை எளிய மக்களுக்கு, தமிழக அரசின் கொள்கை முடிவின்படி இலவச வீட்டு மனை பட்டா வழங்கி, பொது மக்களின் பொது பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம்.
தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி உள்ளது. பள்ளி குழந்தைகள் தொடங்கி வயதானவர்கள் வரை அனைவருக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒரு திட்டமாக இருப்பது தான் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம். HDS-Free House Site Patta (House Site Dwelling Patta)Scheme.இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான ஏழை குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் மூலமாக ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மனை பட்டா வழங்கப்படுகிறது. தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 நிதிநிலை அறிக்கையில் மக்கள் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் இதுவரை 10 இலட்சத்திற்கும் அதிகமான இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டில் கூடுதலாக 5இலட்சம் இலவச பட்டாக்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.

இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கான தகுதி வரம்புகள் பற்றி தமிழக அரசு ஆணை GO – Ms – 97 – 21.02.2025′ ல் தெளிவாக கூறப்பட்டுள்ளன. தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டாவை பெற வேண்டுமென்றால், உங்கள் பெயரில் எந்த வீட்டுமனையும் இருக்கக் கூடாது. அதேபோல், உங்கள் பெயரில் எந்த சொத்தும் இருக்கக் கூடாது. தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆட்சேபனை இல்லாத ஆக்கிரமிப்பு இடத்தில் வீடு கட்டி குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது வசித்து இருக்க வேண்டும். அத்துடன் ஆக்கிரமித்து குடியிருக்கும் இடத்திற்கான அனைத்து ஆவணங்களும் இருக்க வேண்டும்.

நிபந்தனை
தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா திட்டத்தின் கீழ் மனை மற்றும் பட்டா வாங்கியவர்கள் பின்னாளில் அதை யாருக்கும் விற்க முடியாது. அதற்கு பதிலாக பரம்பரை பரம்பரையாக பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும், இத்தனை வருடம் கழித்து இந்த நிலத்தை விற்றுக்கொள்ளலாம் என கால வரம்பு குறிப்பிடப்பட்டு இருந்தால், அதற்கு பிறகு விற்றுக்கொள்ளலாம்.

புறம்போக்கு நிலம் பட்டா பெறுவது எப்படி?
தமிழக அரசு வழங்கும் புறம்போக்கு நிலங்களுக்கான இலவச வீட்டு மனை பட்டாவை பெற அந்தந்த மாவட்ட ஆட்சியர் அல்லது தாலுகா வட்டாட்சியரிடம் ஒரு மனுவை நீங்களே கைப்பட எழுதியோ, அதில் நீங்கள் எத்தனை வருடமாக அந்த இடத்தில் வசித்து வருகின்றீர்கள் என்பதை குறிப்பிட்டு, அத்துடன் முகவரி சான்றிதழ் ஏதாவது ஒன்று, வீட்டு வரி ரசீது, மின்சார ரசீது ஆகியவற்றையும் இணைத்து வட்டாட்சியரிடம் அந்த மனுவை வழங்க வேண்டும்.

வட்டாட்சியர் உங்களுடைய மனுவை பெற்று, உங்கள் பகுதியிலுள்ள கிராம அலுவலரை தொடர்பு கொண்டு ஒரு அறிக்கையை அளிக்க கூறுவார். அதாவது, கிராம அலுவலர் நீங்கள் எத்தனை வருடங்களாக அந்த இடத்தில் வசித்து வருகின்றீர்கள் என்பதை விசாரணை நடத்தி வட்டாட்சியருக்கு பரிசீலனை அனுப்புவார். அதன் பிறகு வட்டாட்சியர் அனைத்து ஆவணங்களையும் சரிபார்ப்பார். அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில் அந்த இடத்திற்கான பட்டா உங்களுடைய பெயரில் இலவசமாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கு பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டி இருக்கும்.
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
வீடு இல்லாததை உறுதி செய்யும் ஆவணம்
வாடகை ஒப்பந்த பத்திரம்
சாதிச் சான்றிதழ்
வருமானச் சான்றிதழ்
வாக்காளர் புகைப்படம் அடையாள அட்டை
ரேஷன் கார்டு
ஆதார் கார்டு
கேஸ் கனெக்சன் ரசீது
பட்டா பெற விரும்பும் இடத்தில் வசிப்பதற்கான ஆதாரம்.
வீட்டு வரி ரசீது
தண்ணீர் ரசீது
மின்சார ரசீது

Related Posts

POST MY ADD