
திருச்சி – 01.02.26
ஆன்லைனில் மொபைல் , உதிரிபாகங்கள் விற்பனை தடை செய்ய வேண்டும், பொது இடங்களில் சிம் கார்டு விற்பனை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மொபைல் விற்பனையாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
தமிழ்நாடு அனைத்து மொபைல் சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் எழுச்சி மாநாடு திருச்சி பஞ்சப்பூர் பகுதிகள் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து மொபைல் விற்பனையாளர்கள் மற்றும் பழுது நீக்கும் கடை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் 50 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்ட மொபைல் கடை உரிமையாளர்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. மொபைல் போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் துறையில் தற்போதுள்ள அதிநவீன செயல்பாடுகள் குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
தமிழ்நாடு மொபைல் விற்பனையாளர் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதர் கூறும் போது….. இந்தியாவிலேயே முதல்முறையாக மொபைல் விற்பனையாளர்களின் எழுச்சி மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் கலந்து கொண்டார்கள்.
ஆன்லைனில் மொபைல் மற்றும் மொபைல் உதிரி பாகங்கள் விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடை அமைத்து சிம் கார்டு விற்பனை செய்வதையும் அரசு தடை செய்ய வேண்டும் . இதனால் சைபர் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.

உலக அளவில் சிப்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலை ஏற்றதால் மொபைல் போன் விலை அதிகரித்து உள்ளது. இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மொபைல் ஃபோன்களின் தேவை அதிகரிக்கும் உற்பத்தி மற்றும் உதிரி பாகங்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.
ஆன்லைனில் மொபைல் மற்றும் உதிரி பாகங்கள் விலை கம்மியாக இருப்பதால் பலர் அதை வாங்குகின்றனர் ஆனால் அவை தரமற்ற பொருட்கள், நாங்கள் நல்ல பொருட்களை விற்பனை செய்வதால் பாதிக்கப்படுகிறோம் என்றார்.
பேட்டி – ஸ்ரீதர் , தமிழ்நாடு மொபைல் விற்பனையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர்.



