NTT TAMIL

Current Date and Time
Loading...

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கரடிக்கல் ஊராட்சியில் அடங்கியுள்ள செட்டிகுளம் மற்றும் பெருமாள் பட்டி , ஊர் பெரியோர்கள் சென்னை தாயகம் வந்து 2022 ஆகஸ்ட் 16ஆம் தேதி துரை வைகோ எம்.பி யை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

மிகவும் பின்தங்கி உள்ள செட்டிகுளம் பெருமாள்பட்டி கிராமத்தில் இருந்த அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் சிதைந்து பழுதாகி போனதால் பள்ளிக்கூடமே மூடப்பட்டு விட்டதாகவும், எங்கள் குழந்தைகள் 4 கி.மீ பயணம் செய்து படிக்க வேண்டிய நிலை இருக்கிறது என்றும் கவலை பொங்கத் தெரிவித்தனர்.

குழந்தைகள் குறித்த நேரத்தில் தொடக்கப் பள்ளிக்கு செல்வதற்கு பேருந்து வசதியோ வேறு எந்த வாகன வசதியோ கிடையாது.

எனவே பிள்ளைகள் தொடக்க கல்வியே பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று எப்படியாவது எங்கள் ஊரில் மீண்டும் தொடக்கப் பள்ளியை இயங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று செட்டிகுளம் மற்றும் பெருமாள்பட்டி மக்கள் அவரிடம் கோரிக்கை வைத்தனர்.

உடனடியாக 2022 ஆகஸ்டு 30 ஆம் தேதியே செட்டிகுளம் கிராமத்துக்கு நேரில் சென்று,
பொதுமக்களை சந்தித்தார் துரை வைகோ .

அந்த ஊர் சாதாரண அடித்தட்டு எளிய மக்கள் வாழ்கிற பகுதி என்பதையும் தங்கள் குழந்தைகளுக்கு தொடக்க கல்வியே தர முடியாத நிலை உருவாகி எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்று செட்டிகுளம் மக்கள் வேதனைப்படுவதையும் கண்டவர்.

நான் கண்டிப்பாக முயற்சி செய்து பள்ளிக்கூடம் மீண்டும் செயல்படுவதற்கு ஆவன செய்கிறேன் என்று செட்டிகுளம் மற்றும் பெருமாள் பட்டி மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு வந்தார்.

பின்னர் இது தொடர்பாக அரசுத்துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கவனத்திற்கு கொண்டு சென்று மீண்டும் அரசு தொடக்கப்பள்ளி செட்டிகுளத்தில் இயங்குவதற்கு வழிவகை காண வேண்டும் என வலியுறுத்தி வந்தார துரை வைகோ.

அவரது தொடர் முயற்சியின் விளைவாக சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் செட்டிகுளத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை அரசு ஆணை பிறப்பித்தது.

சொந்தக் கட்டிடம் இல்லாததால் தனியார் கட்டிடத்தில் தொடக்கப்பள்ளி தற்போது மீண்டும் இயங்கி வருகிறது.

அந்தக் கட்டிடத்தையும் மறுமலர்ச்சி திமுக தோழர் நல்லையா அவர்கள்தான் அளித்துள்ளார் என்பது நமக்குப் பெருமை தருகிறது.

செட்டிகுளத்தில் சுமார் 20 சென்ட் அரசு நிலம் கண்டறியப்பட்டு அதில் 10 சென்டில்
தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று செட்டிகுளம் மக்கள் வேண்டுகோளை ஏற்று அங்கு சென்றிருந்தார் துரை வைகோ எம்.பி.

அந்தப் பகுதி மக்கள் தாய்மார்கள் இன்முகத்துடன் அவரை வரவேற்று நன்றி கூறினர்.

அந்த ஊர் மக்களிடமும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களிடமும் துரை வைகோ எம்.பி பேசும் போது,

“உங்கள் மகிழ்ச்சி தான் என்னுடைய மகிழ்ச்சி;
மிகவும் பின்தங்கியுள்ள இந்தப் பகுதி முன்னேற வேண்டுமானால் நம் குழந்தைகளுக்கு கல்வி புகட்ட வேண்டும்.
கல்விதான் நம் பிள்ளைகளுக்கு முன்னேற்றத்திற்கு படிக்கட்டுகளாக அமையும். நன்றாக படித்து எதிர்காலத்தில் அரசு அதிகாரிகளாகவோ பொறியாளர்களாகவோ மருத்துவர்களாகவோ இந்த குழந்தைகள் உயர வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.


அதற்கான அடித்தளம் இந்த தொடக்கப் பள்ளியில் இருந்து தான் தொடங்க வேண்டும்.
எத்தனையோ அரசியல் பணிகளுக்கு இடையே செட்டிகுளம் ஊர் மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றியது எனக்கு மன நிறைவைத் தருகிறது.
தொடக்கப் பள்ளிக்கு சொந்த கட்டிடத்தையும் விரைவாக கட்டி முடிக்க ஏற்பாடு செய்வோம் .”என்று கூறினார்.

மேலும்,
செட்டிகுளம் மற்றும் பெருமாள் பட்டி மக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் தொடக்கப் பள்ளியை செயல்பட வழிவகை செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும்
நன்றி தெரிவித்து விடை பெற்றார் துரை வைகோ எம்.பி.

Related Posts

POST MY ADD