NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி

ஸ்ரீரங்கம் வெள்ளிதிருமுத்தம் கிராமத்திற்குற்பட்ட 350 ஏக்கர் நிலம் அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்றும்,இந்த இடத்தில் பல லட்சம் மக்கள் தலைமுறை தலைமுறையாக குடியிருந்துவருகின்றனர்.

இதில் 41 பேர் தாங்கள் வசிக்கும் இடத்திற்கான பட்டா கேட்டு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதில் ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தில் குடியிருப்போரின் அடிமனைகள் அரங்கனுக்கே சொந்தமானது என நீதிபதி சுவாமிநாதன்தீர்ப்பளித்தார், 19 ஆண்டுகளுக்குபிறகு தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பால் அடிமனையில் குடியிருக்கும் அனைத்துதரப்பு மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் என்றும், இந்ததீர்ப்பை திரும்பபெற வலியுறுத்தியும், ஸ்ரீரங்கம் அடிமனையில் உரிமை பிரச்சனையில் தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் சட்டமன்றத்தில் இதற்கான உடனடி தீர்வு காண தனி சட்டம் இயற்றவும் வலியுறுத்தி ஸ்ரீரங்கம் மக்களின் அடிமனை வாழ்வாதார உரிமைகோரி ராஜகோபுரம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அடிமனை உரிமை மீட்பு குழு சார்பில் கட்சி பாகுபாடின்றி நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் தலைமை கொறடா மனோகரன், காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ஜவகர், திமுக ஸ்ரீரங்கம்பொறுப்பாளர் ராம்குமார் உள்ளிட்ட பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் எதிராகவும், அடிமனை விவகாரத்தில் உரியதீர்வு காணவேண்டியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

Related Posts

POST MY ADD