
பில்ராத் மருத்துவமனை, புதிய இதய செயலிழப்பு கிளினிக் மற்றும் நுரையீரல் எம்போலிசம் பரிந்துரை மையத்துடன் மேம்பட்ட இதய மற்றும் நுரையீரல் சிறப்பு சேவைகளைத் தொடங்குகிறது
நகரின் முன்னணி பல்நோக்கு மருத்துவ மையங்களில் ஒன்றாகவும், மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் – லேசர் சிகிச்சை முறைகளில் முன்னோடியாகவும் இருக்கிறது சென்னை பில்ராத் மருத்துவமனை
சென்னை ஆர் ஏ புறத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற விழாவில், ஒரு புதிய இதய செயலிழப்பு கிளினிக் மற்றும் நுரையீரல் எம்போலிசம் பரிந்துரை மையத்துடன்
அதன் மேம்பட்ட இதய மற்றும் நுரையீரல் சிறப்பு சேவைகளை தொடங்கியதன் மூலம் ஒரு புதிய மைல்கல்லை பில்ராத் மருத்துவமனை எட்டியது.
இதய மாற்று அறுவைசிகிச்சை திட்டம், இதயச் செயல் குறைபாடு சிகிச்சை – இதய மறுவாழ்வு மையம், நுரையீரல் உயர்ரத்த அழுத்த சிகிச்சை மையம், நுரையீரல் தமனியில் ரத்த உறைவு மருத்துவப் பரிந்துரை மையம் ஆகியவை இந்த சேவையில் அடங்கும். இவை அனைத்தும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த, துல்லியமான, மக்கள் நலனை மையமாகக் கொண்ட இதய – நுரையீரல் பராமரிப்பை வழங்க உள்ளன.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ராஜேஷ் ஜெகநாதன், வெற்றிகரமாக இதய மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட பயனாளி ஒருவருக்கு இருபது லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையை வழங்கினார்.
அனைவரையும் நெகிழச் செய்த இந்த மகத்தான செயல், மேம்பட்ட மருத்துவ பராமரிப்பு மூலம் மறுவாழ்வு அளிப்பது மட்டுமல்லாமல், அறுவைசிகிச்சைக்குப் பிறகும் நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதில் மருத்துவமனை கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

சிறப்பு, அவசர, மேம்பட்ட பராமரிப்பு திறன்களுக்கான இதய மையம்:
2003ஆம் ஆண்டில் செயல்பாடுகளைத் தொடங்கிய இந்த மருத்துவமனையின் இதயவியல் துறை, சிக்கலான இதய நோய்களைக் கையாளுவதற்கு மேம்பட்ட நுட்பங்களையும் நவீன தொழில்நுட்பங்களையும் தொடர்ந்து கையாண்டு சிக்கலான இதய நோய்நிலைகளுக்குத் தீர்வளிக்கும் ஒரு சிறந்த சிகிச்சை மையமாக வளர்ந்துள்ளது.

50,000-க்கும் மேற்பட்ட கேத் லேப் நடைமுறைகள், 10,000-க்கும் மேற்பட்ட சி.டி.வி.எஸ் (CTVS) அறுவைசிகிச்சைகளைச் செய்த பாரம்பரியத்துடன், இதய சிகிச்சைத் துறையில் புதிய தரநிலைகளை பில்ராத் மருத்துவமனை உருவாக்குகிறது. இந்த மருத்துவமனை தற்போது ஷெனாய் நகர், ஆர்.ஏ. புரம் கிளைகளில் 24×7 மணிநேரமும் மேம்பட்ட இதய அவசர சிகிச்சை சேவைகளை வழங்கி வருகிறது. இது உடனடி நிபுணத்துவ ஆலோசனை மற்றும் தீவிர சிகிச்சை நாள் முழுவதும் கிடைப்பதை உறுதிசெய்கிறது.



