முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் – ஸ்ரீரங்கத்தில் உற்சாக கொண்டாட்டம்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் இன்று காலை முதலே திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீரங்கம் சமூக ஊடகப்பிரிவு சார்பில் செயலாளர்கள் ஆயில் மில் பாஸ்கர், முரளி அகர்வால் ஆகியோரது கூட்டு முயற்சியில் கட்சி உறுப்பினர்களுக்கும் பெண்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி முன்னாள் அமைச்சர் கழக […]

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் – ஸ்ரீரங்கத்தில் உற்சாக கொண்டாட்டம்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் இன்று காலை முதலே திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீரங்கம் சமூக ஊடகப்பிரிவு சார்பில் ஆயில் மில் கோபால் முரளி அகர்வால் ஆகியோரது கூட்டு முயற்சியில் கட்சி உறுப்பினர்களுக்கும் பெண்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச்செயலாளர் […]

நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் திட்டங்களை தொடங்கி வைத்த துரை வைகோ எம்.பி

திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1கோடியே 55 லட்சத்து 55 ஆயிரம், மேலும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17.00 இலட்சம் என, மொத்தம் ரூ.1கோடியே 72 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில், திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிகளில் கட்டப்பட்டுள்ள பணிகளை இன்று துரை வைகோ எம்.பி (21/02/2025) திறந்து வைத்தார். திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் காலை 8 மணிக்கு7-ஆவது […]

கிராம்ப்புற மாணவர்களின் கல்விக்கண் திறந்த துரை வைகோ எம்.பி

#நம்ம_MP_நல்ல_MP மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கரடிக்கல் ஊராட்சியில் அடங்கியுள்ள செட்டிகுளம் மற்றும் பெருமாள் பட்டி , ஊர் பெரியோர்கள் சென்னை தாயகம் வந்து 2022 ஆகஸ்ட் 16ஆம் தேதி துரை வைகோ எம்.பி யை சந்தித்து ஒரு மனு அளித்தனர். மிகவும் பின்தங்கி உள்ள செட்டிகுளம் பெருமாள்பட்டி கிராமத்தில் இருந்த அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் சிதைந்து பழுதாகி போனதால் பள்ளிக்கூடமே மூடப்பட்டு விட்டதாகவும், எங்கள் குழந்தைகள் 4 கி.மீ பயணம் செய்து படிக்க வேண்டிய […]

கிரம மாணவர்களின் கல்விக்கண் திறந்த துரை வைகோ எம்.பி

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கரடிக்கல் ஊராட்சியில் அடங்கியுள்ள செட்டிகுளம் மற்றும் பெருமாள் பட்டி , ஊர் பெரியோர்கள் சென்னை தாயகம் வந்து 2022 ஆகஸ்ட் 16ஆம் தேதி துரை வைகோ எம்.பி யை சந்தித்து ஒரு மனு அளித்தனர். மிகவும் பின்தங்கி உள்ள செட்டிகுளம் பெருமாள்பட்டி கிராமத்தில் இருந்த அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் சிதைந்து பழுதாகி போனதால் பள்ளிக்கூடமே மூடப்பட்டு விட்டதாகவும், எங்கள் குழந்தைகள் 4 கி.மீ பயணம் செய்து படிக்க வேண்டிய நிலை […]

1% செஸ் வரியை நீக்கி மக்காச்சோள விவசாயத்தைப் பாதுகாத்ததைப் போலவே, மக்காச்சோளத்திற்கு குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயம் செய்து, அதற்கு ஈடாக மானியம் வழங்கி விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் துரை வைகோ எம்.பி வேண்டுகோள்.

துரை வைகோ எம்பி அறிக்கை நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவு மக்காச்சோள சாகுபடி நடைபெறுகிறது. மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 1% செஸ் வரியால் விவசாயிகள் கடும் கவலையடைந்தனர். இதனை நீக்க வேண்டும் என வலியுறுத்தி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன். மாண்புமிகு துணை முதலமைச்சர் அன்புச் சகோதரர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், வேளாண் துறை அமைச்சர் அண்ணன் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் […]

தொடரும் பாலியல் தொல்லையா? அதிகாரிகள் ஆய்வு.ஆசிரியரே புகார் கொடுக்க உடனடி நடவடிக்கையில் இறங்கிய திருச்சி மாவட்ட நிர்வாகத்தினருக்கு குவியும் பாராட்டுக்கள்.

ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நேற்று, 04/02/2026 மூன்று மணி நேரத்திற்கு மேலாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இரண்டு மணிக்கு வந்து இறங்கிய அதிகாரிகள் மாணவ மாணவிகளை தனித்தனியாக அழைத்து பேசியுள்ளனர். சில ஆசிரியர்களையும் தனியாக விசாரித்துள்ளனர். பின்னர் ஆசிரியர்களை மட்டும் தனியாக வைத்து சட்டம் சொல்வது என்ன? எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் நிர்வாகமே சொன்னாலும் தவறு செய்யக்கூடாது பெண் பிள்ளைகளிடம் எவ்வாறு […]

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்த துரை வைகோ எம்.பி

. இந்தச் சந்திப்பின்போது, 2026 ஒன்றிய பட்ஜெட்டில் நாட்டில் ஐந்து இடங்களில் பல்கலைக்கழக நகரங்கள் (University Township) அமைக்கபடும் என்கிற திட்டத்தில் நாட்டின் மிகச் சிறந்த பல கல்வி நிலையங்களை தன்னகத்தே கொண்டுள்ள, தமிழகத்தின் கல்வி மையமாக (Educational Hub) விளங்கும் மற்றும் மாண்புமிகு நிதி அமைச்சர் உட்பட பல தேச மற்றும் சர்வதேச ஆளுமைகளை உருவாக்கிய திருச்சி மாநகரத்தில் இந்த பல்கலைக்கழக நகரம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் துரை வைகோ எம்பி. மேலும், […]

ஸ்ரீரங்கம் இரயில் நிலையம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய இரயில்வே அமைச்சரை சந்தித்த துரை வைகோ MP.

இன்று( 04.02.2026) மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் துரை வைகோ MP சந்தித்தார். திருச்சி நாடாளுமன்றத் தொகுதியைச் சார்ந்த முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் விரிவாக முன்வைத்தார். முதலாவதாக, ஜி கார்னர் போக்குவரத்து சந்திப்பில் உள்ள போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய அவசியத்தையும், அதற்கு துரை வைகோ மேற்கொண்டுள்ள தொடர் முயற்சியின் நகர்வுகள் குறித்து எடுத்துரைத்தார், ஜி கார்னர் பகுதியில் உள்ள போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு தீர்வாக உயர்மட்ட […]

தமிழ்நாடு அனைத்து மொபைல் சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் எழுச்சி மாநாடு

திருச்சி – 01.02.26 ஆன்லைனில் மொபைல் , உதிரிபாகங்கள் விற்பனை தடை செய்ய வேண்டும், பொது இடங்களில் சிம் கார்டு விற்பனை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மொபைல் விற்பனையாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை தமிழ்நாடு அனைத்து மொபைல் சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் எழுச்சி மாநாடு திருச்சி பஞ்சப்பூர் பகுதிகள் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து மொபைல் விற்பனையாளர்கள் மற்றும் பழுது நீக்கும் கடை உரிமையாளர்கள் […]

துரை வைகோ MP யின் தொடர் மனிதாபிமான செயல்கள்

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா பாஸ்கர் அவர்களின் குடும்பத்தினர்,கடந்த 20.01.2026 அன்று பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் துரை வைகோ MP யை நேரில் சந்தித்து,சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வேலைக்குச் சென்று, ஷார்ஜாவில் தற்கொலை செய்து கொண்ட கருப்பையா பாஸ்கர் அவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர உதவி கோரினர். சுற்றுலா விசாவில் சென்றிருந்த காரணத்தாலும், அவர் வேலைக்காக அங்கு தங்கியிருந்த சூழ்நிலையாலும்,சட்டப்பூர்வ நடைமுறைகள் மிகவும் சிக்கலானதாக இருந்த இந்த […]

துரை வைகோ அவர்களின் தொடர் சாதனை -திருவெறும்பூரில் சோழன் விரைவு ரயில் நின்று செல்கிறது

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக துரை வைகோ வெற்றி பெற்ற ஒன்றரை ஆண்டுகளில், பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் செய்து வருகிறார். அதில், இன்று பெரும் மகிழ்ச்சியான செய்தி, அவரது கோரிக்கையை ஏற்று மத்திய ரயில்வே துறையின் உத்தரவின்படி, சோழன் விரைவு ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. திருவெறும்பூர் மக்களுடன், துரை வைகோ வும் இணைந்து அந்த ரயிலை வரவேற்று மகிழ்ந்தார். திருவெறும்பூரில் சோழன் விரைவு ரயில் நிற்கவேண்டும் என்ற அவரது கோரிக்கை மனுவினை, 12.12.2024 […]

இரும்புக்கை மாயாவி.. தமிழ் காமிக்ஸ் சகாப்தம் மறைந்தார்! – காமிக்ஸ் ரசிகர்கள் அஞ்சலி!

இரும்புக்கை மாயாவி.. தமிழ் காமிக்ஸ் சகாப்தம் மறைந்தார்! – காமிக்ஸ் ரசிகர்கள் அஞ்சலி!

335

பிரபலமான இரும்புக்கை மாயாவி உள்ளிட்ட பல காமிக்ஸ் நாயகர்களை தமிழில் அறிமுகப்படுத்திய முத்து காமிக்ஸ் நிறுவனர் சௌந்தரபாண்டியன் இன்று இயற்கை எய்தினார்.

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

335

வெறுப்புணர்வு பற்றி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.