New Trichy Times

Current Date and Time
Loading...

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ என்கிற படத்தில் நடித்துள்ளார் அஜித் குமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். இதில் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ், பிரசன்னா, பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன.

இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இதையொட்டி கடந்த சில வாரங்களாக இந்த படத்திலிருந்து ஒவ்வொரு பாடலாக வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை வருகின்ற ஏப்ரல் 3ம் தேதி அன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD