NTT TAMIL

Current Date and Time
Loading...

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், டிடிவி.தினகரன் ஆகியோர் மணி மண்டபத்தில் உள்ள முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தில் அனைத்து தலைவர்களையும் போற்றுகின்ற ஒரு கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. 75 வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியா முழுவதும் மறைக்கப்பட்ட அனைத்து தலைவர்களின் வரலாறுகளையும் ஆவணப் படுத்துவது, அனைத்து தலைவர்களின் புகழையும், நாட்டிற்கு ஆற்றிய சேவைகளையும் மக்களுக்கு எடுத்துக் கொண்டு பங்கை மேற்கொண்டு வருகிறார்.

விரைவில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் அப்பொழுது எந்த இடத்தில் மணிமண்டபம் கட்டினால் குறிப்பிடுக முத்திரையர் க்கு பெருமை சேர்க்குமோ அந்த இடத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்.

மேலும், அடுத்த ஆண்டு பெரும்பிடுகு முத்தரையருக்கு மத்திய அரசின் சார்பில் இதே இடத்தில் தபால் தலை வெளியிடப்படும் என தெரிவித்தார்.

Related Posts

POST MY ADD