திருச்சி மாவட்டத்தின் ஸ்ரீரங்கம் சட்டமன்றத்தொகுதி எப்போதுமே தனித்துவம் மிக்கது. ஆன்மீக பூமியின் ஸ்ரீரங்கம் ஆழ்வார்கள் பாடல்களில் 108 வைணவத்தளங்களில் முதன்மையானதாக போற்றப்படுவதோடு இந்து தர்மத்தின் ஆதர்ஷ சக்தியாக போற்றப்படுகிறது.
திராவிடத்தலைவர்களும் சரி தேசியத்தலைவர்களும் சரி தேர்தல் பரப்புயை துவங்குவது ஸ்ரீரங்கத்தில் தான். ஆன்மீகத்திலும் அரசியலிலும் ஸ்ரீரங்கம் வெற்றித்தளமாக அறியப்படுகின்றது.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டு முதல்வரானது குறிப்பிடத்தக்கது.
அவரைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய், தனது முதல் தேர்தல் பரப்புரையை வரும் 13-ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்தில் தொடங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து புஸ்ஸி ஆனந்த், திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஏற்கெனவே 2 மாநில மாநாடுகளை வெற்றிகரமாக முடித்துள்ள போதிலும், தேர்தல் பரப்புரை களத்தில், அதுவும் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் (2011-ல்) தொகுதியில் முதல் முறையாக விஜய் கால் பதிக்க உள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் திருச்சியில் ஒரு தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் கசிந்த நிலையில் விஜய் தற்போது திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பது திருச்சியில் உள்ள பெரிய அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் ஸ்ரீரங்கம்சட்டமன்றத்தொகுதியில் முதல்வர் வேட்பாளராக நிற்கிறாரோ இல்லையோ திருமகள் பூமி சுக்கிரன் ஸ்தலம் எனப்போற்றப்படும் ஸ்ரீரங்கம் தவெக தலைவர் விஜய்க்கு வெற்றி மகுடத்தை தரப்போவது நிச்சயம்.